திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று (நவம்பர் 26) சென்னையில் நடைபெற உள்ளது.
திமுக இளைஞரணி மாநில மாநாடு டிசம்பர் 17-ஆம் தேதி சேலம் மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தில் நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாட்டு பணிகளில் மாவட்ட செயலாளர்கள், இளைஞரணி நிர்வாகிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். மாநாடு நடைபெறும் இடத்தை இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நவம்பர் 22-ஆம் தேதி பார்வையிட்டார்.
இளைஞரணி மாநாட்டை முன்னிட்டு நவம்பர் 15-ஆம் தேதி கன்னியாகுமரியில் உதயநிதி ஸ்டாலின் பைக் பேரணியை துவக்கி வைத்தார். 13 நாட்கள் நடைபெற உள்ள இந்த பைக் பேரணியில், 8,647 கி.மீ தொலைவிற்கு இளைஞரணியினர் பயணிக்க உள்ளனர்.
இந்தநிலையில் இளைஞரணி மாநாடு, வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள், உறுப்பினர்களின் பணிகள் குறித்து திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை தியாகராய நகர் ஓட்டல் அக்கார்டில் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறுகிறது.
இதனை தொடர்ந்து இளைஞரணி மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் சென்னை அன்பகத்தில் நடைபெற உள்ளது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் இளைஞரணி மாநாடு குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கனமழை: 100 ஏக்கருக்கு மேல் மிளகாய் விவசாயம் பாதிப்பு!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
ஓட்டுநா், நடத்துநா்கள் தோ்வு முடிவுகள் எப்போது வெளியீடு?
காட்டுப்பன்றிக்கு வைத்த பொறியில் பலியான புலி!