தமிழகத்தில் இன்று (நவம்பர் 26) வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. நாடு முழுவதும் அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் ஆணையம் அதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.
இந்தச் சூழலில் தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 27ஆம் தேதி வெளியிடப்பட்டது. வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு ஜனவரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இதற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளதாகவும், இதில் பெயர் சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டத்தை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் வாக்காளர் சிறப்பு முகாம் இன்று (நவம்பர் 26) நடைபெறுகிறது. தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் டிசம்பர் 2, 3 தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 31,000 வாக்குச்சாவடி அமைவிடங்களில் உள்ள 68,000-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் இந்த வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்கள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சண்டே ஸ்பெஷல்: அஜீரணமா… ஹார்ட் அட்டாக்கா… அடையாளம் காண்பது எப்படி?
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!