தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியிருக்கும் நிலையில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தசூழலில் நமது மின்னம்பலம் 234 தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து மெகா சர்வே நடத்தியது.
மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகள் ஏப்ரல் 9 முதல் மின்னம்பலம் இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியாகிறது.
இதில் திண்டிவனம் சட்டப்பேரவைத் தொகுதியை கைப்பற்றப்போவது யார் என பார்க்கலாம்…
திண்டிவனம் வாக்காளர்கள்

வயது வாரியான வாக்காளர்கள் : ஆண்- பெண்



சாதி வாரியான வாக்காளர்கள்

2021 – சட்டமன்ற தேர்தல் வெற்றி

2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி

2026 – மின்னம்பலம் சர்வே முடிவு

திண்டிவனம் தனித் தொகுதி… திமுக, அதிமுக மாறி மாறி வெற்றி பெறுகிற தொகுதி.
2021-ல் அதிமுகவின் அர்ச்சுனன் வெற்றி பெற்றார். திமுகவின் சீதாபதி 9,753 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
இந்த முறை திமுக கூட்டணியில் விசிகவின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு களம் காண்கிறார்.
போன முறை வானூர் தொகுதியில் போட்டியிட்ட வன்னி அரசு வெற்றி பெறவில்லை. அதிமுகவில சிட்டிங் எம்.எல்.ஏ. அர்ச்சுனனே மீண்டும் வேட்பாளராக களமிறங்கியிருக்கிறார்.
இங்கே பாமகவும் கணிசமான வாக்குகளை வைத்திருக்கிறது.
தவெக சார்பில் சக்திவேல், நாதக சார்பில் பேச்சிமுத்து ஆகியோர் களம் காண்கின்றனர்.
நமது சர்வே முடிவுபடி,
திமுக கூட்டணி- 40%
அதிமுக கூட்டணி – 32%
தவெக-19%
நாதக- 4% வாக்குகள் பெறும்
திமுக கூட்டணி வேட்பாளர் வன்னி அரசுக்கு சாதகமாக களம் இருக்கிறது.
கருத்து கணிப்பின் முடிவுகள் 3% சதவீதம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்க சாத்தியம் உள்ளது.
அடுத்த தொகுதி சர்வே முடிவு விரைவில்









