தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்கும் – திருமா நம்பிக்கை

Published On:

| By Pandeeswari Gurusamy

சபரி வர்மன் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றும், தமிழகத்தில் தவெக அரசு ஐந்து ஆண்டுகள் முழுமையாக நீடிக்கும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

திருவாரூரில் இன்று (ஜூலை 16) செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன் பேசுகையில், “சபரி வர்மன் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டிருந்தாலும், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்களிடையே வலுப்பெற்று வருகிறது. எனவே, பொதுமக்களின் இந்த நியாயமான கோரிக்கையை ஏற்று, கொலை வழக்கை உடனடியாக சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு விசிக சார்பில் வேண்டுகோள் வைக்கிறேன்” என்றார்.

ADVERTISEMENT

தொடர்ந்து, தமிழகத்தில் தவெக அரசு கவிழ்ந்துவிடும் என்று எதிர்க்கட்சிகள் பேசி வருவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “தமிழகத்தில் தவெக அரசு ஐந்து ஆண்டுகள் முழுமையாக நீடிக்கும். இது மக்கள் வழங்கிய கட்டளை ஆகும். எனவே, இந்த ஆட்சி கவிழ்வதற்கு எவ்வித முகாந்திரமும் இல்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்று கூறினார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share