கார் என்பது வெறும் அந்தஸ்தின் சின்னம் மட்டுமல்ல. அது ஒரு அன்றாடத் தேவையாகவும் இருக்கிறதுட. இந்நிலையில் கார் வாங்கத் திட்டமிடுபவர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. பல வங்கிகள் நல்ல வட்டி விகிதங்களில் கார் கடன்களை (Car Loan) வழங்குகின்றன. கார் கடன் வட்டி விகிதங்கள் சுமார் 7.45 சதவீதத்தில் தொடங்குவதால், ஒரு புதிய வாகனத்தை வாங்குவது முன்பை விட எளிதாகத் தோன்றலாம். இருப்பினும், உற்று நோக்கினால் கடன் வாங்குவது எளிதாகிவிட்டாலும், அது மலிவானதாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்பது தெரியவரும்.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி, HDFC வங்கி, ICICI வங்கி மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி போன்ற கடன் வழங்குநர்களிடையே வட்டி விகிதங்கள், மாதாந்திரத் தவணைகள் (EMI) மற்றும் செயலாக்கக் கட்டணங்கள் கணிசமாக வேறுபடுகின்றன. மேலும், கடனின் இறுதிச் செலவானது கடன் தகுதி மதிப்பெண் (கிரெடிட் ஸ்கோர்), திருப்பிச் செலுத்தும் காலம் மற்றும் கூடுதல் கட்டணங்கள் போன்ற காரணிகளைச் சார்ந்துள்ளது. பொது மற்றும் தனியார் வங்கிகளுக்கு இடையே கார் கடன் வட்டி விகிதங்கள் கணிசமாக வேறுபடுவதால், ஒப்பீடு செய்வது மிகவும் அவசியமாகிறது. கடன் வழங்குநரின் தன்மை மற்றும் திட்டத்தைப் பொறுத்து, சந்தை விகிதங்கள் சுமார் 7.45 சதவீதத்தில் தொடங்குகின்றன.
பஞ்சாப் நேஷனல் வங்கி: 7.60–10.70 சதவீதம்; மாதத் தவணை ரூ. 10,043–ரூ. 10,797
பேங்க் ஆஃப் பரோடா: 7.60–11.35 சதவீதம்; மாதத் தவணை ரூ. 10,043–ரூ. 10,959
ஃபெடரல் வங்கி: 7.60–9.00 சதவீதம்; மாதத் தவணை ரூ. 10,198 முதல்
பஞ்சாப் & சிந்து வங்கி: 7.50–14.00 சதவீதம்; மாதத் தவணை ரூ. 10,019–ரூ. 11,634
கனரா வங்கி: 7.45–11.45 சதவீதம்; மாதத் தவணை ரூ. 10,007–ரூ. 10,984
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா: 8.70–9.85 சதவீதம்; மாதத் தவணை ரூ. 10,355–ரூ. 10,587
HDFC வங்கி: 8.15 சதவீதம் முதல்; மாதத் தவணை ரூ. 10,174 முதல்
ஐசிஐசிஐ வங்கி: 8.50 சதவீதம் முதல்; மாதத் தவணை ரூ. 10,258 முதல்
இந்தத் தொகைகள் ஐந்து வருடக் கால அவகாசத்துடன் கூடிய ரூ. 5 லட்சம் கடனுக்கான தோராயமான தொகைகளாகும். இவை தனிநபரின் தகுதியைப் பொறுத்து மாறுபடலாம்.
