தனியார் துப்பறியும் நிறுவனம் நடத்தி வருபவர் சிவகுமார் நாயர். நாவல் ஆசிரியர்.
சில்வர் டச் இந்தியா புரொடக்ஷன் சார்பில் இவர் தயாரித்து, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படம் ‘தீர்ப்பு’.
பிரபல எடிட்டர் பி.லெனின் இந்தப் படத்துக்கான எடிட்டிங் மற்றும் மேக்கிங் பொறுப்புகளை ஏற்று இருக்கிறார்.
படம் பற்றி கூறும் இயக்குனர் சிவகுமார் நாயர், “படத்தை முழுக்க முழுக்க இன்வெஸ்டிகேஷன் கலந்த க்ரைம் திரில்லராக உருவாக்க இருக்கிறோம். படம் நிச்சயம் சினிமா ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை கொடுக்கும்.
சென்னை மற்றும் அட்டப்பாடி, ஊட்டி கொடைக்கானல் போன்ற இடங்களில் படப்பிடிப்பு” என்றார்.
சிவாஜி நடித்து தீர்ப்பு என்ற ஒரு படம் 1980 களில் தயாரானது.
ஆனால் அந்தப் படம் வியாபாரம் ஆகாத காரணத்தால் பெட்டியில் தூங்கி கொண்டு இருந்தது. அப்புறம் சில்க் ஸ்மிதாவை வைத்து முத்தெடுக்கும் ஆசையில என்ற ஒரு பாடலை எடுத்து இணைத்ததும் அந்த படம் ரிலீசாகி நூறு நாட்கள் ஓடியது. ( சிவாஜிக்கா சிலுக்குக்கா என்று கேட்கக் கூடாது)
அந்தப் படத்துக்கு சிலுக்கு கிடைத்தது போல இந்தப் படத்துக்கும் ஒரு ‘காட்டன்’ கிடைக்கட்டும்.
ஆகவே மிஸ்டர் நாயர்,,, துப்பறிவது எல்லாம் ரொம்ப ஈஸி. ஒரு படம் எடுத்து அதையும் நன்றாக எடுத்து ஓட வைப்பது தான் ரொம்பக் கஷ்டம்.
— ராஜ திருமகன்
