‘டாடா’ வெற்றிப் படத்தின் மூலம் அதிகம் அறியப்பட்டவர் இயக்குனர் கணேஷ் கே பாபு. தற்போது ‘கராத்தே பாபு’ என்ற படத்தை இயக்கி வரும் கணேஷ் பாபு, அதற்குள் தயாரிப்பாளராகவும் ஆகி இருக்கிறார். (ரெண்டே பட டைரக்ஷனுக்கு அவ்வளவு காசா கொடுத்தாங்க?)
தனது ஜிகேபி தயாரிப்பு நிறுவனம் சார்பில் கௌதம் கார்த்திக் நடிக்கும் படத்தை தயாரிக்கிறார்.
இயக்குனர் ராஜு முருகனின் உதவியாளராக பணியாற்றிய தினா ராகவன் தயாரிக்கிறார்.
சமகால அரசியலை மையமாக வைத்து உருவாகும் இந்த புதிய படத்தின் பூஜைக்கு இயக்குநர்கள் எச். வினோத், ராஜு முருகன் மற்றும் தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கே செந்தில் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
“கௌதம் ராம் கார்த்திக் தனது கேரியரில் ஒரு வலுவான நிலைக்கு வந்துள்ளார். சாமானியனின் அரசியல் வாழ்வை காமெடி கலந்து எடுத்துரைக்கும் இந்த படத்துக்குத் தேவையான ஆழமும் திறனும் கௌதம் கார்த்திக்கிடம் உள்ளது. சுவாரஸ்யத்தையும் எதார்த்தத்தையும் நகைச்சுவையையும் கலந்து கொடுக்கும் அவரின் திறமை இந்தப் படத்தின் மிகப் பெரிய பலமாக இருக்கும்” என்கிறார். கணேஷ் பாபு.
இந்தப் படத்தில் செல்வராகவன் இதுவரை பார்க்காத புதிய பரிமாணம் கொண்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
பில்டப் நல்லா இருக்கு. பில்டிங் எப்படி இருக்கு என்று பார்ப்போம்!.
— ராஜ திருமகன்
