சட்டசபை கூடியது.. நம்பிக்கை கோரும் தீர்மானத்தை வாசித்தார் விஜய்

Published On:

| By Pandeeswari Gurusamy

TN Assembly

விஜய்யின் அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள பரபரபப்பான சூழலில் தமிழக சட்டமன்றம் கூடியது.

தமிழக சட்டசபையில் அரசு தனது பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பு இன்று (மே 13) நடைபெறுகிறது.அதன்படி இன்று (புதன்கிழமை) சட்டசபையில் அரசு சார்பில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை ஆளும் கட்சி சார்பில் விஜய் முன்மொழிந்தார்.

ADVERTISEMENT

தற்போது சட்டப்பேரவையில் 232 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். இதனால், எனவே 116 உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்தால் பெரும்பான்மை கிடைத்துவிடும்.

திருச்சி கிழக்கில் விஜய் ராஜிநாமா செய்துள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வென்ற சீனிவாச சேதுபதி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும் சட்டப்பேரவைத் தலைவராக ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஜே.சி.டி பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு மூன்று வாக்குகளைத் தவிர்த்து, தவெகவில் 105 வாக்குகள் உள்ளன.

ADVERTISEMENT

இந்நிலையில் அதிமுகவின் சி.வி. சண்முகம் தலைமையில் பிரிந்த குழுவினர் தவெகவிற்கு ஆதரவாக வாக்களிக்க உள்ளனர்.அமமுகவில் இருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ. காமராஜும் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். இதனால் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு பெரும்பான்மை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share