Tamil Nadu Assembly Trust Vote Live Updates: நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றது விஜய் ‘சர்க்கார்’!

Published On:

| By Pandeeswari Gurusamy

TN Assembly Vijay

விஜய்யின் அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள பரபரபப்பான சூழலில் தமிழக சட்டமன்றம் கூடியது.

தமிழக சட்டசபையில் அரசு தனது பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பு இன்று (மே 13) நடைபெறுகிறது.அதன்படி இன்று (புதன்கிழமை) சட்டசபையில் அரசு சார்பில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை ஆளும் கட்சி சார்பில் விஜய் முன்மொழிந்தார். நம்பிக்கை வாக்கெடுப்பின் லைவ் அப்டேட்டுகளை இப்பக்கத்தில் காணலாம்.

ADVERTISEMENT

  • சட்டசபை மொத்த பலம் 234
    திருச்சி கிழக்கு ராஜினாமாவால் காலி இடம்
    தவெக எம்.எக்.ஏ. சீனிவாச சேதுபதிக்கு நீதிமன்றம் தடை
    சபாநாயகர ஜேசிடி பிரபாகர் இல்லாமல்
    சட்டசபையின் பலம் 231.
    திமுக, தேமுதிக வெளிநடப்பு: 57+1- 58
    திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் வெற்றி பெற்ற மதிமுகவின் 2 எம்.எல்.ஏக்கள் சபைக்கு வரவில்லை
    வாக்கெடுப்பு நடந்த போது சட்டசபை எம்.எல்.ஏக்கள் 171
    ஆதரவு
    தவெக – 105
    காங்கிரஸ் – 5
    சிபிஐ – 2
    சிபிஎம் – 2
    விசிக – 2
    முஸ்லீம் லீக் – 2
    எஸ்பி வேலுமணி அதிமுக-25
    சுயேட்சை-1
    மொத்தம் : 144 (ஆதரவு )
    பாஜக : நடுநிலை -1
    பாமக : நடுநிலை – 4
    எடப்பாடி தரப்பு எதிர்ப்பு : 22
  • அதிமுக எதிர்ப்பு 22; அதிமுக ஆதரவு 25; நடுநிலைவகித்தது- 5
  • திமுகவின் 59; தேமுதிக 1 எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு.
  • விஜய்க்கு 144 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு; எதிர்ப்பு 22; நடுநிலை 5- நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி!
  • எடப்பாடி பழனிசாமி அணியின் 25.எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு
  • எஸ்பி வேலுமணியின் 22 எம்.எல்.ஏக்கள் ஆதரவு
  • குரல் வாக்கெடுபு- டிவிஷன் வாக்கெடுப்பு நடத்தலாம்; தீர்மானத்தின் முக்கியத்துவத்தின் அடிப்படையில் டிவிஷன் வாக்கெடுப்பு- சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்
  • நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்கியது.
  • குதிரை பேரத்தில் அரசு ஈடுபடவில்லை.. குதிரை வேகத்தில் செயல்படுகிறோம்- முதல்வர் விஜய்
  • முந்தைய அரசின் மக்கள் நல திட்டங்கள் தொடரும்- முதல்வர் விஜய் அறிவிப்பு
  • நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்கு முதலர் விஜய் பதில் உரை
  • உதயநிதியின் கூவத்தூர் குற்றச்சாட்டுக்கு எடப்பாடி பழனிசாமி பதில்
  • நாங்க வெளிநடப்பு செஞ்சாலும் வெற்றி பெற போறீங்க.. திமுக திட்டங்களை தொடர்ந்து செய்யுங்க.. உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்
  • ஓட்டுப் போட்ட மக்களே வருத்தப்படுகின்றனர் – உதயநிதி ஸ்டாலின்
  • ”மற்றும் சிலர்” கட்சியில் இருந்து சிலர் அமைச்சராக வாய்ப்புள்ளது. .அவர்களுக்கு வாழ்த்துகள்- உதயநிதி ஸ்டாலின்
  • ஊழல் சக்தி ஊழல் சக்தின்னு சொல்லிட்டு ஊழல் சக்தியோடு சேர்ந்திருக்கும் ஆளும் கட்சியை என்ன சொல்ல பொகிறீர்கள்? இதுதான் க்ளீன் கவர்மெண்ட்டுக்கு லட்சணமா?
  • சேஞ்சுக்கு பின்னால் எக்ஸ்சேஞ்ச் இருக்கிறதோ? உதயநிதி ஸ்டாலின்
  • பாஜக கூட்டணியில் உள்ள பெரிய கட்சி அதிமுக இரண்டாக பிளவுபட்டுள்ளது; ஒரு பிரிவு விஜய்யை ஆதரிக்கிறது;
  • உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு அமமுகவில் இருந்து நீக்கப்பட்ட காமராஜ் எம்.எல்.ஏ. பேச்சு- உதயநிதி ஸ்டாலின்
  • கொள்கை எதிரி என சொன்ன பாஜக கூட்டணி எம்.எல்.ஏ.வை அந்த கட்சி தலைவருக்கு தெரியாமலேயே ஆதரிக்க வைத்துள்ளீர்கள்- உதயநிதி ஸ்டாலின்
  • திமுக கூட்டணியில் நீடிப்பதாகவே சிபிஐ, சிபிஎம், முஸ்லிம் லீக், விசிக அறிவித்துள்ளன – உதயநிதி ஸ்டாலின்
  • திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்காமல் ராஜினாமா செய்தவர் உதயநிதி ஸ்டாலின்
  • எங்க கூட்டணி கட்சிகளை சேர்த்து கொண்டு ஆட்சி அமைத்துள்ளார் விஜய்- உதயநிதி ஸ்டாலின்
  • ஆளும் தவெகவுக்கு 106 இடங்கள்தான் உள்ளது- உதயநிதி ஸ்டாலின்
  • 65 சதவீதம்/ 3.21 கோடி மக்களால் நிராகரிக்கப்பட்டதுதான் தவெக அரசு- உதயநிதி ஸ்டாலின்
  • பதவிக்கு ஆசைப்பட்டு விஜய்க்கு ஆதரவு இல்லை- எஸ்பி வேலுமணி
  • விஜய் அரசுக்கு ஆதரவு- அதிமுக ஆதரவு என எஸ்பி வேலுமணி அறிவிப்பு
  • எடப்பாடி பழனிசாமிக்கு பின் எஸ்பி வேலுமணி பேச வாய்ப்பு- அதிமுக கடும் எதிர்ப்பு- அதிமுக எம்.எல்.ஏக்கள் அமளி
  • 47 அதிமுக எம்.எல்.ஏக்களும் அரசுக்கு எதிராக வாக்களிக்கிறோம்= எடப்பாடி பழனிசாமி
  • அமைச்சர் பதவி, வாரியத் தலைவர் பேரம் பேசுவதா? எடப்பாடி பழனிசாமி கண்டனம்
  • விஜய்யின் செயல்பாடுகள் தவறான முன்னுதாரணம் ஆக கூடாது- எடப்பாடி பழனிசாமி
  • குதிரை பேரம் குறித்தும் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
  • எஸ்பி வேலுமணி கோஷ்டிக்கு முதல்வர் விஜய் ஆதரவு தருவதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்
  • அரசினர் தீர்மானம் என்பதால் வழிமொழிய தேவை இல்லை- சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் விளக்கம்
  • நம்பிக்கை கோரும் தீர்மானத்தை வழிமொழியாதது ஏன்?- எடப்பாடி பழனிசாமி கேள்வி
  • விஜய் அரசுக்கு மமக எதிர்ப்பு-ஜவாஹிருல்லா
  • மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டம் தேவை- ஜவாஹிருல்லா
  • இந்தி திணிப்பை ஏற்க கூடாது- ஜவாஹிருல்லா
  • முஸ்லிம் ஒருவருக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும்- மமக ஜவாஹிருல்லா
  • கொல்லைப்புற ஆட்சியை பிடிக்காதவர் ஸ்டாலின், விஜய் அரசுக்கு கொமதேக நித்தியானந்தன் எதிர்ப்பு
  • விஜய் அரசுக்கு எதிர்ப்பு- தமிமுன் அன்சாரி

ADVERTISEMENT

  • நம்பிக்கை வாக்கெடுப்பில் பாமக பங்கேற்காது- சவுமியா அன்புமணி
  • கனிமவளக் கொள்ளையை தடுக்க வேண்டும்- சவுமியா அன்புமணி
  • மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்- சவுமியா அன்புமணி
  • தவெக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்- சவுமியா அன்புமணி
  • பாமகவின் கொள்கைகளையே தவெக தேர்தல் அறிக்கை வெளிப்படுத்தி இருந்தது- சவுமியா அன்புமணி
  • ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்- பாமக எம்.எல்.ஏ. சவுமியா அன்புமணி
  • நடுநிலை வகிப்பதாக பாஜக எம்.எல்.ஏ. போஜராஜன் அறிவிப்பு
  • பாஜகவுக்கு எதிரான பிரசார கூட்டமாக மாறிவிட்டது சட்டசபை- பாஜக எம்.எல்.ஏ. போஜராஜன்
  • மன்னர் குடும்பத்தில் இருந்து வரவில்லை என கூறிவிட்டு ராஜகுருவாக ஜோதிடரை நியமிப்பதா? – பிரேமலதா கடும் விமர்சனம்
  • முகத்தை மூடிக் கொண்டு விஜய்யை பார்க்க சென்று பார்த்தது யார்? பிரேமலதா
  • ஆட்சியைப் பாதுகாக்க குதிரை பேரம் நடத்திய தவெக அரசு- பிரேமலதா விஜயகாந்த்
  • சொல்லும் செயலும் ஒன்றாக இருக்க வேண்டும்- பிரேமலதா விஜயகாந்த்
  • மாநில உரிமைகளைப் பாதுகாக்க, பாஜக கால் பதிக்கக் கூடாது என தவெகவுக்கு சிபிஐ ஆதரவு- தளி ராமச்சந்திரன்
  • விஜய் அரசுக்கு ஆதரவு தருகிறோம்- சிபிஐ தளி ராமச்சந்திரன்
  • திமுக எம்.எல்.ஏ. நிவேதா முருகனுடன் காமராஜ் எம்.எல்.ஏ. கடும் வாக்குவாதம்
  • காமராஜ் எம்.எல்.ஏ. பேச்சுக்கு எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு
  • அமமுகவில் இருந்து நீக்கப்பட்ட என்னை முதல்வர் விஜய் காப்பாற்றாமல் இருக்கப் போகிறாரா?- காமராஜ் எம்.எல்.ஏ.
  • விஜய் அரசுக்கு இன்றைக்கும் நாளைக்கும் 5 ஆண்டுகளுக்கும் ஆதரவு- அமமுகவில் இருந்து நீக்கப்பட்ட காமராஜ் எம்.எல்.ஏ.
  • விஜய் அரசுக்கு முஸ்லிம் லீக் ஆதரவு- ஷாஜஹான்
  • ஈழம் வெல்க! தந்தை பெரியார் வாழ்க என விசிக வன்னி அரசு முழக்கம்
  • ஈழத் தமிழர் மாவீரர்களுக்கு தமிழ்நாடு அரசு வீரவணக்கம் செலுத்த வேண்டும்- வன்னி அரசு
  • விசிக வன்னி அரசு பேசும்போது குறுக்கிட்ட சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்
  • ஜோதிடம், பில்லி சூனியத்துக்கு இடம் தரக் கூடாது.
  • மூடநம்பிக்கைகளைத் தடுக்க சட்டம் இயற்ற வேண்டும்- விசிக வன்னி அரசு
  • தமிழக மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்- விசிக வன்னி அரசு
  • ஆணவப்படுகொலைகளைத் தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும்- விசிக வன்னி அரசு
  • மாநில உரிமைகளைப் பாதுகாப்பதில் சமரசமற்று செயல்பட வேண்டும்- விசிக வன்னி அரசு
  • எதிர்க்கட்சித் தலைவர்களை முதல்வர் விஜய் சந்தித்தது நல்ல முன்னுதாரணம் – விசிக வன்னி அரசு
  • மக்களுக்கு பாதகமான திட்டங்களை எதிர்ப்போம்- சிபிஎம் செல்லசாமி
  • குடியரசுத் தலைவர் ஆட்சியை தமிழகத்தில் அமல்படுத்த சதித் திட்டம் தீட்டி இருந்தனர் – சிபிஎம் செல்லசாமி
  • பாஜக மறைமுக ஆட்சி செய்யக் கூடாது என்பதற்காக தவெக அரசுக்கு ஆதரவு- காங்கிரஸ்
  • தவெக அரசுக்கு என்றும் உறுதுணையாக இருக்கும்- காங்கிரஸ்
  • மதச்சார்பற்ற 5 கட்சிகளின் ஆதரவால்தான் தவெக பெரும்பான்மையே பெற்றது- காங்கிரஸ்
  • விஜய் அரசுக்கு காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏக்கள் ஆதரவு- சட்டசபை குழு தலைவர் ராஜேஷ்குமார்
  • தற்போது சட்டப்பேரவையில் 232 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். இதனால், எனவே 116 உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்தால் பெரும்பான்மை கிடைத்துவிடும்.
  • திருச்சி கிழக்கில் விஜய் ராஜிநாமா செய்துள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வென்ற சீனிவாச சேதுபதி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும் சட்டப்பேரவைத் தலைவராக ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஜே.சி.டி பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு மூன்று வாக்குகளைத் தவிர்த்து, தவெகவில் 105 வாக்குகள் உள்ளன.
  • இந்நிலையில் அதிமுகவின் சி.வி. சண்முகம் தலைமையில் பிரிந்த குழுவினர் தவெகவிற்கு ஆதரவாக வாக்களிக்க உள்ளனர்.அமமுகவில் இருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ. காமராஜும் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். இதனால் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு பெரும்பான்மை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share