ADVERTISEMENT

சென்னை வந்ததும் நேராக மாமல்லபுரம் சென்ற மகன் பலி : கதறும் தந்தை!

Published On:

| By christopher

the son who went straight to Mamallapuram was killed: the screaming father!

மலேசியாவில் இருந்து சென்னை திரும்பியவுடன் மாமல்லபுரத்திற்கு காரில் சென்ற இளைஞர் உட்பட 4 பேர் உடல் நசுங்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு கடற்கரை சாலையில் கோவளம் அருகே செம்மஞ்சேரி குப்பம் பேருந்து நிறுத்தம் அருகே இன்று(செப்டம்பர் 4) அதிகாலை ஈச்சர் லாரி ஒன்று பழுதாகி சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

இதன் மீது மாமல்லபுரத்தில் இருந்து  அதிவேகமாக வந்த கார் மோதியதில் மலேசியாவில் இருந்து சென்னை திரும்பிய முகமது ஆஷிக்(22) மற்றும் அவரது நண்பர்கள் அஸ்ரப் முகமது (22), ஆதில் முகமது (22), சுல்தான் (23) ஆகிய நான்குபேரும் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

இந்த கோர விபத்து குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், சென்னை பார்டர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சுல்தான். இவரது மகன் தான் முகமது ஆஷிக். இன்று அதிகாலை 1.30 மணியளவில் தான் மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார்.

ADVERTISEMENT

அவரை வரவேற்று அழைத்துச் செல்ல திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை பகுதிகளைச் சேர்ந்த அவரது நண்பர்களான அஸ்ரப் முகமது, ஆதில் முகமது, சுல்தான் மூவரும் சென்னை விமான நிலையம் வந்திருந்தனர்.

முகம்மது ஆஷிக் வெளியே வந்ததும் அவரது உடைமைகளை காரில் ஏற்றிக் கொண்டு நேராக வீட்டிற்குச் செல்லாமல் வண்டலூர் வழியாக இசிஆர் வழியாக மாமல்லபுரம் சென்றனர்.

ADVERTISEMENT

ஈசிஆரில் பயங்கரம்: சாலையோரம் நின்றுகொண்டிருந்த லாரி மீது கார் மோதி 4 இளைஞர்கள் பலி.. – today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்

அங்கு சிறிது நேரம் தங்கிவிட்டு, விடியற்காலை 4 மணியளவில் நால்வரும் சென்னையை நோக்கிப் புறப்பட்டனர்.

அதிவேகம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்த கார், 4.40 மணியளவில் கோவளம் அருகே சாலைத்தடுப்பில் மோதி, பின்னர் அங்கு பழுதாகி நின்றிருந்த லாரியின் பின்புறத்தில் பாய்ந்தது.

இதில் கார் முற்றிலுமாக உருக்குலைந்த நிலையில், அதற்குள் இருந்த 4 இளைஞர்களும் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

காரை இயந்திரங்கள் மூலம் மீட்டு,  நான்கு உடல்களையும் பிரேதப் பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.

Four friends killed after car rams into truck near Kovalam

இதுதொடர்பாக லாரியின் ஒட்டுநர் ரங்கநாதனிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே முகம்மது ஆஷிக்கின் தந்தை சுல்தான் போலீசாரிடம் கூறுகையில், ”மலேசியாவில் நான் வேலை செய்கிறேன். என்னுடன் சிறிது நாட்கள் இருந்த மகனை நேற்று மாலை தான் ஏர்போர்ட் சென்று விமானத்தில் சென்னைக்கு வழியனுப்பி வைத்தேன்.

அவன் நேராக வீட்டுக்கு சென்றிருந்தால் இந்த விபத்து நடந்திருக்காது. இப்படி ஜாலியாக ஊர் சுற்றிவிட்டு சென்றதால், விபத்தில் பலியாகிவிட்டான். என் மகனை நான் இழந்துவிட்டேன்” என உருக்கமாக தனது சோகத்தை தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

அண்ணன் வர்றார் வழிவிடு… ‘கோட்’ ஸ்பெஷல் ஷோ-க்கு பெர்மிஷன் கிடைச்சாச்சு!

நித்யானந்தா ஆஜராக மறுப்பு : மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் அதிரடி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share