Share Market : புதிய உச்சத்தை அடைந்த இந்திய பங்குச் சந்தை!

Published On:

| By christopher

ஜூன் 18ம் தேதி செவ்வாய்க்கிழமை இந்திய பங்குச் சந்தை புதிய உச்சத்தை அடைந்து அதன் முந்தைய சாதனையை முறியடித்தது . வர்த்தக இறுதியில் முறையே சென்செக்ஸ் 308.37 புள்ளிகள் உயர்ந்து 77,301.14 புள்ளியிலும், நிஃப்டி 92.30 புள்ளிகள் உயர்ந்து 23,557.90 புள்ளியிலும் முடிவடைந்தன.

செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் Mazagon Dock Shipbuilders, HAL, கொச்சின் கப்பல் ஷிப் யார்டு, BEML, BEL, HDFC வங்கி மற்றும் ஜி.ஆர் நிறுவன பங்குகள் மதிப்பு அடிப்படையில் NSE இல் மிகவும் அதிகமாக வர்த்தகமாகின.
மேலும் Shriram Finance, Power Grid Corp, Wipro, Titan Company, and Adani Enterprises, Maruti Suzuki India, Dr Reddy’s Lab, Ultra Tech Cement, Tata Steel and Tata Motors பங்குகளும் அதிக அளவில் வர்த்தகமாகின.

சில்லறை முதலீட்டாளர்களிடையே அதிக வர்த்தகம் காரணமாக Mazagon Dock Shipbuilders, Chemplast Sanmar, SKF India, JK Paper, KEC International, ABB India மற்றும் Poly Medicure பங்குகள் புதிய 52 வார உச்சத்தை அடைந்தன.

Purnartha Investment Advisers (Purnartha) நிறுவனம் தனது போர்ட்ஃபோலியோ மேலாண்மை சேவைகளுக்கான நிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்துக்கள் (AUM) ரூ. 2,000 கோடியைத் தாண்டிவிட்டதாக அறிவித்தது. கடந்த செப்டம்பர் 2022ல் இந்நிறுவனத்தின் சொத்து மதிப்பு 1000 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Paytm இன் தாய் நிறுவனமான One 97 Communications பங்கு செவ்வாயன்று 4% வரை அதிகரித்தன.

கடந்த ஜூன் 18ம் தேதி தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPCR) மேற்கொண்ட சோதனையில் 50 சிறுவர்கள் பணி புரிந்ததை கண்டறிந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் இயங்கி வரும் சசோம் டிஸ்டில்லரிஸ் மற்றும் ப்ரூவரிஸ் பங்குகள் செவ்வாய் அன்று 16% வரை சரிந்தன.

ஜூன் 19 புதன்கிழமை உலகலாவிய மற்றும் ஆசிய பங்குச் சந்தை ஏற்றம் காரணமாக இந்திய பெஞ்ச்மார்க் குறியீடுகள் நிஃப்டி 30.35 புள்ளிகள் உயர்ந்து 23,558.25 ஆகவும், சென்செக்ஸ் 102.02 புள்ளிகள் உயர்ந்து 77,403.16 ஆகவும் புதிய உச்சத்துடன் காலை வர்த்தகம் தொடங்கியது.

புதன்கிழமை வர்த்தகத்தில் ஐசிஐசிஐ வங்கி, இண்டஸ்இண்ட் வங்கி, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், டாடா ஸ்டீல், கோடக் மஹிந்திரா வங்கி ஆகிய பங்குகள் அதிக லாபம் ஈட்டின. டைட்டன், ஸ்ரீராம் ஃபைனான்ஸ், அதானி எண்டர்பிரைசஸ், பிபிசிஎல், ஹீரோ மோட்டோகார்ப் ஆகிய நிறுவன பங்குகள் நட்டத்தை சந்தித்தன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மணியன் கலியமூர்த்தி

சுதந்திர தினத்தில் தங்கலான்.. வில்லன் போஸ்டரை வெளியிட்ட பா. ரஞ்சித்

கேப்டன் பதவியில் இருந்து வில்லியம்சன் விலகல்… தாங்குமா நியூசிலாந்து அணி?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share