காங்கிரஸ் மூத்த தலைவர் கிருஷ்ணசாமிக்கு தகைசால் தமிழர் விருது- சவுமியா அன்புமணி தந்தை

Published On:

| By Mathi

Thagaisal Thamizhar Award for Veteran Congress Leader Krishnaswamy

தமிழக அரசின் தகைசால் தமிழர் விருது, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கிருஷ்ணசாமிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பாமக எம்.எல்.ஏ. சவுமியா அன்புமணியின் தந்தை கிருஷ்ணசாமி.

2021-ம் ஆண்டு திமுக ஆட்சியில் முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின், சுதந்திர தின நாளில், தமிழ்நாட்டுக்கும் தமிழின வளர்ச்சிக்கும் தொண்டாற்றிய பெருமக்களுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கப்படும் என அறிவித்தார்.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து முதலாவது தகைசால் தமிழர் விருது மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் என். சங்கரய்யாவுக்கு வழங்கப்பட்டது. 2022-ல் மற்றொரு கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு, 2023-ல் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, 2024-ல் மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன், 2025-ல் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சித் தலைவர் காதர் மொகிதீன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

இந்த ஆண்டு, முதல்வர் விஜய் அரசின் முதலாவது தகைசால் தமிழர் விருது, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தமிழக தலைவரான கிருஷ்ணசாமிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கிருஷ்ணசாமியின் மகள் சவுமியா அன்புமணி, பாமக எம்.எல்.ஏ.; கிருஷ்ணசாமியின் மகன் விஷ்ணு பிரசாத் காங்கிரஸ் எம்.பி.

கிருஷ்ணசாமிக்கு தகைசால் தமிழர் விருது வழங்கப்பட்டுள்ளதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

காங்கிரஸ் மூத்த தலைவர் கிருஷ்ணசாமிக்கு சென்னையில் இன்று நடைபெறும் சுதந்திர தின விழாவில் முதல்வர் விஜய், தகைசால் தமிழர் விருது வழங்குகிறார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share