அமுதனின் பெற்றோருக்கு ஆறுதல் கூறிய உதயநிதி ஸ்டாலின்

Published On:

| By Kavi

கோவையில் சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவர் அமுதனின் பெற்றோரைத் தொடர்பு கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் உள்ள இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் , கல்லூரிக்கு வெளியில் சக மாணவர்கள் தாக்கியதில் படுகாயம் அடைந்தார். இதைத்தொடர்ந்து சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட மாணவர் அமுதன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

ADVERTISEMENT

இது தொடர்பாக சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் குரல் எழுப்பினர். 

இந்த சூழலில் அவர் அமுதனின் பெற்றோரை தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியுள்ளார். 

ADVERTISEMENT

இதுகுறித்து இன்று (ஆகஸ்ட் 14) திமுக தனது எக்ஸ் பக்கத்தில் , “ஏற்கெனவே சட்டசபையில் அமுதன் கொலை குறித்து கவன ஈர்ப்பு தீர்மானத்தை எதிர்க்கட்சித் தலைவர் கொண்டுவந்தபோது, திங்கள் அன்று விவாதத்துக்கு எடுத்துக்கொள்வதாக சபாநாயகர் தெரிவித்திருந்தார்.

 ‘’உதயநிதி சார்தான் நீதி பெற்று தர வேண்டும்’’ என்று அமுதனின் தாயாரும் உருக்கமாகத் தெரிவித்திருந்தார்.

ADVERTISEMENT

இன்று அமுதனின் பெற்றோரைத் தொடர்புகொண்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் , அமுதனின் மரணத்துக்குத் தன் ஆழ்ந்த இரங்கல்களையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொண்டார். 

மேலும் திங்கள் அன்று சட்டசபையில் இந்த சம்பவம் குறித்து விரிவாகப் பேசுவதாகவும் அமுதனின் மரணத்துக்கு நீதி கிடைக்கும்வரை, அமுதனின் பெற்றோருக்கு உறுதுணையாக இருந்து போராடுவதாகவும் உறுதிபட தெரிவித்தார்” என்று கூறப்பட்டுள்ளது.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share