செங்கல்பட்டு பத்திரிகையாளர் சந்திப்பில், செய்தியாளர் ஒருவருக்கும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கும் மோதல் ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
செங்கல்ப்பட்டில் இன்று ஜூன் 30-ந் தேதி நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய வைகோ, “ஒரு சதுர அடிக்கு இவ்வளவு ரேட்டுன்னு வச்ச, ஒரே ஆட்சி திமுக ஆட்சிதான். கமிஷன், அது கட்டிங், பிறகு கரப்ஷன். இதை சிஎம் விஜய் ஒழிச்சிட்டாருல்ல?” என்றார்.
அப்போது குறுக்கிட்ட செய்தியாளர், “அந்த கூட்டணியில நீங்கள் இருந்தீங்க சார்” என கேள்வி கேட்க, “ அந்த கூட்டணியில இருந்தேங்கிறதை நான் மறுக்காம சொல்றேன்.. கூட்டணியில்தான் இருந்தேன்..” என்றார் வைகோ.
அதற்கும் அந்த செய்தியாளர், “கூட்டணியை விட்டு வெளியில வந்ததுக்கு அப்புறம் தான் அதை பற்றி பேசுறீங்களே”ன்னு கேள்வி கேட்க, ”கூட்டணியில இருந்துகிட்டு பேசுறது அது அயோக்கியத்தனம் இல்லையா? கூட்டணிக்கு உள்ளே இருந்துகிட்டு கூட்டணியை அட்டாக் பண்றது, என்ன அரசியல் தர்மம்? கூட்டணி தர்மத்துக்காக பேசாம இருந்தேன். அதுல என்ன தப்பு? அதான் சரியான அணுகுமுறை. கூட்டணியில இருந்துகிட்டே விமர்சனம் கூடாது. உங்க கருத்தை நான் ஏன் ஏத்துக்கணும்”என கோபப்பட்டார் வைகோ.
அப்போது திருக்குறளை செய்தியாளர் மேற்கோள் காட்ட, “1330 திருக்குறளையும் உங்ககிட்ட நானும் சொல்வேன்”ன்னு மீண்டும் கோபத்தை வெளிப்படுத்தினார் வைகோ.
அத்துடன், “நீங்க திட்டமிட்டு வந்திருக்கேன்னு எனக்குத் தெரியும். நீங்க எந்த பத்திரிக்கை சார்? நீங்க மஞ்சப் பத்திரிக்கையா? நீங்க மஞ்சப் பத்திரிக்கையா? நீங்க மஞ்சப் பத்திரிக்கையா? நீங்க மஞ்சப் பத்திரிக்கையா? நீங்க திட்டமிட்டு வந்திருக்கீங்க இங்க. யார் உங்களை ஏவி விட்டது? உங்க பத்திரிக்கை முதலாளி ஏவி விட்டாரா? நீங்க தினகரனா? அது மஞ்சப் பத்திரிக்கை ஆயிடுச்சே.. முந்தா நாளே என்னை அவமானப்படுத்தி அரைப் பக்கம் எழுதினீங்களே.. கோர்ட்ல கேஸ் போட போறேன்..
ஏய், நீங்க திட்டமிட்டுதான் வந்திருக்கீங்க. நீங்க குழப்பம் பண்றதுக்காக வந்திருக்கீங்க. ஆமா, குழப்பம் பண்றதுக்காக வந்திருக்கீங்க. இங்க உங்களுக்கு வேலை கிடையாது. உங்களுக்கு வேலை கிடையாது. வெளியே போங்க! வெளியே போங்க! வேணும்னு தானே கேக்குற? வெளியே போங்க. வெளியே அனுப்பு… மரியாதை கெட்டு போகும்..”என எச்சரித்தார் வைகோ. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
