டிசிஎஸ் வாக்-இன் வேலைவாய்ப்பு: 7 நகரங்களில் நேர்காணல்

Published On:

| By Santhosh Raj Saravanan

tcs walkin april 18 python developer 7 locations

டிசிஎஸ் வாக்-இன் ஆட்சேர்ப்பு

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், அனுபவமுள்ள தொழில்நுட்ப நிபுணர்களுக்கான வாக்-இன் (TCS Walkin) வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த வாக்-இன் நேர்காணல் ஏப்ரல் 18, 2026 அன்று நடைபெற உள்ளது. நாடு முழுவதும் பல முக்கிய நகரங்களில் இந்த ஆட்சேர்ப்பு (Recruitment) நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

இந்த வாக்-இன் டிரைவ் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், புனே, மும்பை,கொல்கத்தா, நோய்டா, உள்ளிட்ட 7 நகரங்களில் ஒரே நாளில் நடைபெற உள்ளது.

ADVERTISEMENT

இதனால், விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு அருகிலுள்ள மையத்தில் நேரடியாக கலந்து கொள்ளலாம்.

எந்த பணிகளுக்கு ஆட்சேர்ப்பு?

இந்த டிரைவில் முக்கியமாக தொழில்நுட்ப பணிகளுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. பைதான் டெவலப்பர், டேட்டா இன்ஜினியர், கிளவுட் தொடர்பான பணிகள், பிக் டேட்டா மற்றும் அனலிட்டிக்ஸ், போன்ற பல்வேறு ஐடி துறைகள் அடங்கும்.

ADVERTISEMENT

பைத்தான் டெவலப்பர் பணிக்கான முக்கிய திறன்களில் பைத்தான் புரோகிராமிங், டிஜாங்கோ/ஃபிளாஸ்க் போன்ற ஃப்ரேம்வொர்க் அறிவு, டேட்டா ஹேண்ட்லிங் மற்றும் ஏஐ/எம்எல் அடிப்படை போன்றவை முக்கியமாக பார்க்கப்படுகின்றன.

யார் விண்ணப்பிக்கலாம்?

இந்த வாக்-இன் நேர்காணலில் கலந்து கொள்ள பொதுவாக 3 முதல் 10 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டவர்கள், தொடர்புடைய ஐடி துறையில் வேலை அனுபவம், தொழில்நுட்ப திறன்களில் நல்ல புரிதல் அவசியமாகும்.

இந்த ஆட்சேர்ப்பில் எழுத்துத் தேர்வு இல்லாமல், நேரடி தொழில்நுட்ப மற்றும் எச்ஆர் இன்டர்வியூ மூலம் தேர்வு நடைபெறும்.

விண்ணப்பதாரர்கள் அப்டேட் செய்யப்பட்ட ரெஸ்யூம், அடையாள ஆவணம், அனுபவ சான்றுகள் எடுத்துச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏன் இந்த டிரைவ் முக்கியம்?

டிசிஎஸ் போன்ற பெரிய நிறுவனத்தில் உலகளாவிய திட்டங்களில் பணியாற்றும் வாய்ப்பு, ஏஐ, கிளவுட், டேட்டா துறைகளில் முன்னேற்றம், தொழில்முன்னேற்றத்திற்கு வலுவான தளம் என்பதால், இந்த வாக்-இன் டிரைவ் ஐடி துறையில் அனுபவமுள்ளவர்களுக்கு முக்கிய வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

ஏப்ரல் 18 அன்று நடைபெறும் டிசிஎஸ் வாக்-இன் வேலைவாய்ப்பு, பைதான் டெவலப்பர் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப பணிகளில் முன்னேற விரும்பும் நிபுணர்களுக்கு நேரடி வாய்ப்பாகும். தகுதியானவர்கள் அருகிலுள்ள மையத்தில் கலந்து கொண்டு இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share