உள்துறை செயலாளர் மணிவாசன் திடீர் இடம் மாற்றம்!

Published On:

| By Pandeeswari Gurusamy

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக தலைமைச் செயலாளர் சாய்குமார் ஐஏஎஸ் வெளியிட்டுள்ள உத்தரவில், “டாக்டர் கே. மணிவாசன், ஐ.ஏ.எஸ்., உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், கூடுதல் தலைமைச் செயலாளர் / நில நிர்வாக ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

ஏ. கார்த்திக், ஐ.ஏ.எஸ்., தமிழ்நாடு சிறு தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் (டான்சிட்கோ) முதன்மைச் செயலாளர் / தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர், உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT

வி. அருண் ராய், ஐ.ஏ.எஸ்., தமிழ்நாடு மின்வாரியம் மற்றும் தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர், நிதித்துறை அரசு செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.

என். வெங்கடேஷ், ஐ.ஏ.எஸ்., நிதித்துறை அரசு செயலாளர், வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளராக, வேளாண்மை – உழவர் நலத்துறைக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT

ராஜேஷ் லக்கோனி, ஐ.ஏ.எஸ்., நில நிர்வாக ஆணையர், தமிழ்நாடு மின்வாரியம் மற்றும் தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இவர் தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம், மின்தொடரமைப்பு கழகம் மற்றும் பசுமை எரிசக்தி கழகத்தின் தலைவராகவும் செயல்படுவார்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் இணை மேலாண் இயக்குநராகப் பணியாற்றி வந்த வி. சிவகிருஷ்ணமூர்த்தி, தேனி மாவட்ட ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT

இதையடுத்து, தேனி மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றி வந்த டாக்டர் ஆர். வைத்திநாதன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் இணை மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

டாக்டர் ஆர். வைத்திநாதனின் அயற்பணி தொடர்பான நிபந்தனைகள், 21.02.1994 தேதியிட்ட அரசாணை எண் 167-இன் அடிப்படையில் நிர்வகிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share