பிளாஸ்டிக் பைகளுக்கு குட்பை: மண்ணைப் பாதுகாக்கும் மஞ்சப்பை!

Published On:

| By Aara

தற்போது உலகம் முழுதும் விவாதிக்கப்பட்டு வரும் முக்கியமான பொருண்மை என்னவென்றால்… இந்த பூமியின் மாசுபாடு பற்றியும், கால நிலை மாறுபாட்டால் இந்த பூமி உள்ளிட்ட வெளிப் பாதைக்கு ஏற்பட்டு வரும் அச்சுறுத்தலும்தான்.

இப்படி ஒரு முக்கியமான காலகட்டத்தில்…  தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் மாநில சுற்றுச்சூழல் காலநிலை மாற்ற துறை அமைச்சராக செயல்படும், சிவ.வீ.மெய்யநாதன் நிர்வாகத்தில் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன?

தொழிற்சாலைகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக எடுக்கப்படும் செயல்திறனை மதிப்பீடு செய்வதற்காகவும் மற்றும் பிற புதுமையான முயற்சிகளை பின்பற்றுவதன் மூலம் சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்கு நிர்ணயிக்கப்பட்ட தரத்தைவிட சிறப்பாக செயல்பட தொழிற்சாலைகளை ஊக்குவிப்பதற்காகவும் தமிழக அரசு, யுனைடெட் கிங்டம் துணை ஆணையகத்துடன் இணைந்து இந்தியாவிலேயே முதன் முறையாக தொழிற்சாலைகளை பசுமை மதிப்பீடு செய்யும் திட்டத்தினை செயல்படுத்த முன்வந்துள்ளது.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் மாநிலத்தில் 14 இடங்களில் நிகழ்நேர நீர் தரக் கண்காணிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் மாநிலத்தில் 25 இடங்களில் தொடர்ச்சியான சுற்றுப்புற காற்று தர கண்காணிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டு வருகின்றன.

வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை அதிகரிப்பதற்கு ஏதுவாக வாரியத்தால் ஒவ்வொரு மாதமும் 5ஆம் தேதி அன்று நேரடி கலந்தாய்வு அமர்வு (Open House Session) நடத்தப்பட்டுவருகின்றன. பாரம்பரியத்திற்கு திரும்பும் மீண்டும் மஞ்சப்பை பிரச்சாரம், அடித்தட்டு மக்கள் வரை கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சாரம் தமிழ்நாட்டின் பாரம்பரியமான சுற்றுச்சூழலுக்கு உகந்த மஞ்சள் பையின் பயன்பாட்டை மீட்டெடுத்துள்ளது.

இதுவரை சுமார் 1,89,191 விழிப்புணர்வு பிரச்சாரங்கள் பள்ளி மாணவர்களுடன் நடத்தப்பட்டுள்ளன.தமிழ்நாட்டில் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கான சுற்றுச்சூழல் மாற்றுப் பொருட்களின் உற்பத்தியாளர்கள் மற்றும் விநியோகிப்பவர்களின் தகவல் அடங்கிய தொகுப்பு தயாரிக்கப்பட்டு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதுவரை 130 தானியங்கி துணிப்பை விற்பனை இயந்திரங்களை சந்தைகள், பொது கட்டிட வளாகங்கள் மற்றும் வணிக வளாகங்கள் போன்ற இடங்களில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் நிறுவியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் 5 மஞ்சப்பை விற்பனை இயந்திரங்கள் மற்றும் 2 நெகிழி நொறுக்கும் இயந்திரங்களையும் மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் 5 மஞ்சப்பை விற்பனை இயந்திரங்கள் மற்றும் 1 நெகிழி நொறுக்கும் இயந்திரங்களை நிறுவியுள்ளது.

மேலும், இவ்வியந்திரங்கள் மூலம் மூன்று லட்சம் துணி பைகள் விநியோகிக்கப்பட்டுள்ளது. மஞ்சப்பைக்காக பயன்பாட்டை பரவலாக்க தமிழ்நாடு உருவாக்கிய தானியங்கி விற்பனை இயந்திரம் மாவட்டங்களை சென்றடைந்துள்ளது.

35 மஞ்சப்பை விற்பனை இயந்திரங்களின் இருப்பிடங்கள் மற்றும் தமிழ்நாட்டில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடையை அமல்படுத்திய விவரங்களுடன் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு (SUPs) சுற்றுச்சூழல் மாற்று உற்பத்தியாளர்களின் எளிதாக்குவதற்காக விவரங்களைப்பற்றி மீண்டும் மஞ்சப்பை பயனர்களுக்கு செயலியானது தொடங்கப்பட்டுள்ளது.

புகைப்படங்களைப் பதிவேற்றி புகாரைப் பதிவு செய்வதற்கும் செயலியில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதைத் தவிர்த்து சிறந்த முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் 3 சிறந்த பள்ளிகள், 3 சிறந்த கல்லூரிகள் மற்றும் 3 சிறந்த வணிக வளாகங்களுக்கு வெகுமதி அளிக்கும் வகையில் மஞ்சப்பை விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது.

மீண்டும் மஞ்சப்பை பிரச்சாரத்தை வலுப்படுத்தவும், பொதுமக்களுக்கு மஞ்சப்பை கிடைக்கச்செய்யவும், மஞ்சப்பை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, சூரியசக்தியில் இயங்கும் கடலோரக் கழிவுகள் கண்காணிப்பு கியோஸ்க், மஞ்சப்பை விற்பனை இயந்திரம் மற்றும் நெகிழி நொறுக்கும் இயந்திரம் ஆகியவை சென்னை பெசன்ட்நகர் கடற்கரையில் நிறுவப்பட்டுள்ளன.

சர்வதேச கடற்கரை தூய்மைப்படுத்தும் தினத்தையொட்டி நீலாங்கரை கடற்கரையில் மாநில அளவிலான கடலோர தூய்மைப்படுத்தல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்வு செப்டம்பர் 17, 2023 அன்று சுற்றுச்சூழல் காலநிலை மாற்ற அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது.

தமிழ்நாடு மீன் வலை முன்முயற்சிகள் (TNFI), மீன்வலைகளால் கடல் மாசுபடுவதைத் தடுப்பதற்கும், கைவிடப்பட்ட மீன்வலைகளுக்கான சேகரிப்பு மையங்களை நிறுவுவதன் மூலம் கடல் பல்லுயிர்களைப் பாதுகாப்பதற்கும். அவற்றை மறுசுழற்சி செய்வதற்கும் அவற்றை மீட்டெடுப்பதற்கும் மற்றும் சுழற்சி பொருளாதாரத் தீர்வுகளைச் செயல்படுத்துவதற்கும் வாரியத்தால்தொடங்கப்பட்ட ஒரு தனித்துவமான மற்றும் புதுமையான முயற்சியாகும்.

சுழற்சி பொருளாதாரத்தில் கழிவு சேகரிப்பவர்களுக்கு, கழிவு சேகரிப்பை அதிகரிக்கவும், சுழற்சி பொருளாதாரத்தை மேம்படுத்தவும், கழிவு சேகரிப்பவர்களின் வாழ்க்கையைப் புதுப்பிக்கவும், சென்னை பெருநகர மாநகராட்சியின் 13 மற்றும் 14 ஆம் மண்டலங்களில் முன்னோடித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இணையவழி கழிவு பரிமாற்ற தளம் என்பது வட்டப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக பல்வேறு வகையான கழிவுகளின் பங்குதாரர்களை ஒன்றிணைக்கும் இணையதள அடிப்படையிலான பயன்பாடாகும்.

தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சாலைகள் மூலம் நாட்டு மரங்களால் ஆன 1000 குறுங்காடுகள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் தொழில்துறை பகுதிகளில் மண்ணின் தர வரைபடம் உருவாக்கப்பட்டு வருகிறது.

ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மைய பசுமைக் கட்டிடம் சென்னையில் அமைத்தல், தமிழ்நாடு மாசு கட்டுபாடு வாரியம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு முன்மாதிரியான பங்களிப்பைச் செய்த அமைப்பு, கல்வி நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், குடியிருப்பு நலச் சங்கங்கள்,  தனிநபர்கள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் முதன்மையாளர் விருது வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு தமிழ்நாடு அரசு கால நிலை மாற்றத்தை எதிகொள்ளும் வகையிலும் சுற்றுச் சூழலில் பசுமையை பேணும் வகையிலும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அரசு என்றால் அரசு மட்டுமல்ல, இந்த விழிப்புணர்வு பணியில் பொது மக்களும் இணைந்தால்தான் இலக்கு சாத்தியமாகும். பூமி  நமது அடுத்த தலைமுறைக்கும் பாத்தியமாகும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்து: பின்னணியில் இஸ்ரேலா?

IPL 2024: கிறிஸ் கெய்லிடம் கோலி வைத்த டிமாண்ட்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share