தமிழக சட்டமன்றத் தேர்தலில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டு வாக்குப்பதிவு அதிகரித்து வருகிறது.
பகல் ஒரு மணி நிலவரப்படி 56.81 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 2021 சட்டமன்றத் தேர்தலின் போது பகல் ஒரு மணிக்கு 39.61 சதவிகித வாக்குகளே பதிவாகி இருந்த நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் கூடுதலாக 17.2 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
காலை 11 மணி நிலவரப்படி 37.56 சதவிகித வாக்குகள் பதிவாகி இருந்தன. இதுவே 2021 தேர்தலில் 26.29 சதவிகித வாக்குகள் பதிவாகி இருந்தது.
காலை 9 மணி நிலவரப்படி 17.69 சதவிகித வாக்குகள் பதிவானது. இது 2021 சட்டமன்றத் தேர்தலில் 13.80 சதவிகிதமாக பதிவாகி இருந்தது.
வாக்குப்பதிவு அதிகரித்திருப்பது என்பது மக்கள் மத்தியில் தங்களின் வாக்கு எவ்வளவு முக்கியம் என்ற விழிப்புணர்வு அதிகரித்துள்ளதை காட்டுகிறது.
