Tamil Nadu Election 2026: வாக்களிக்க திணறிய முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

Published On:

| By Pandeeswari Gurusamy

sreenivasan

அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வாக்களிக்க திணறிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் இன்று (ஏப்ரல் 23) ஒரே கட்டமான 234 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில் திண்டுக்கல் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், இன்று காலை தனது வாக்குச்சாவடிக்குச் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார்.

ADVERTISEMENT

வாக்களிக்கும் இயந்திரத்தில் தனது கட்சியின் சின்னத்திற்கு நேராக உள்ள பட்டனை அழுத்தாமல், அருகில் இருந்த சிவப்பு லைட்டை அழுத்திவிட்டார்.

மேலும் வாக்கு பதிவாகவில்லை என தேர்தல் அலுவலரிடம் தெரிவித்தார். உடனே, அங்கிருந்த பெண் தேர்தல் அலுவலர் ஒருவர் அருகில் வந்து, சரியான பட்டனை காட்டி வாக்களிக்குமாறு விளக்கினார். அதன்பிறகு திண்டுக்கல் சீனிவாசன் தனது வாக்கை சரியாகப் பதிவு செய்தார்.இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share