நல் ஆளுமை விருது பெற்றவர்கள் யார் யார்?

Published On:

| By srinivasan

தமிழகத்தில் சிறப்பாக செயல்படும் மாவட்டங்கள், அரசுத் துறைகள், அரசு ஊழியா்கள், அரசு சார்பு அமைப்புகள், நிறுவனங்களுக்கு ஆண்டு தோறும் தமிழ்நாடு அரசின் சார்பாக சுதந்திர தினத்தன்று நல் ஆளுமை விருது வழங்கப்படும்.

இந்நிலையில் இந்தாண்டு சுதந்திர தின நல் ஆளுமை விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை ஜார்ஜ் கோட்டையில் நல் ஆளுமை விருதும் அதற்கான பரிசு தொகையும் வழங்கினார்.

ADVERTISEMENT

பரிசு பெற்றவர்களின் விபரம்:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திர போராட்ட வீரருமான ஆர்.நல்லுகண்ணுவுக்கு தகைசால் தமிழர் விருதினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

ADVERTISEMENT

டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் விருது – முனைவர் இஞ்ஞாசி முத்து

mk stalin presented independence day award 2022

கல்பனா சாவ்லா விருது – எழிலரசி ( குளத்தில் முழ்கிய இளைஞர்களை காப்பாற்றிய செயலுக்காக அவருக்கு விருது வழங்கப்பட்டது. )

ADVERTISEMENT

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் விருது – லட்சுமி பிரியா

மாற்றுதிறனாளி சேவைகளுக்கான விருது – ஜெய் கணேஷ்மூர்த்தி -உதகை அரசு மருத்துவமனை மருத்துவர்.

சிறந்த சமூக பணியாளர் விருது – அமுதசாந்தி – மாற்றுதிறனாளி நலனுக்காக பணியாற்றியவர்.

முதலமைச்சரின் ‘மாநில இளைஞர் விருது’ விஜயகுமார், முஹமது ஆசிக், வேலுரை சேர்ந்த ஸ்ரீகாந்த், நாகையைச் சேர்ந்த சிவரஞ்சனி ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

மாற்றுதிறனாளிகளுக்கு அதிக வேலைவாய்ப்பு அளித்த டாஃபே ரிஹாப் செண்டர், அறிவு சார் குறைவுடையவர்களுக்கான சிறப்பு பள்ளியை நடத்தும் ரெனேசான்ஸ் அறக்கட்டளை, மகளிர் நலனுக்கான சிறந்த சேவையாற்றிய வானவில் அறக்கட்டளை ஆகிய அமைப்புகளுக்கும் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

தாய்கேர் நெல்லை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் நெல்லை மாவட்ட நிர்வாகத்திற்கும் விருது வழங்கப்பட்டது.

mk stalin presented independence day award 2022

நல் ஆளுமைகள் விருது:

திருவள்ளூர் கலெக்டர் அல்பி ஜான் வர்கீசு – செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக பணியாற்றியவர்களை மீட்டு, அவர்களை தொழில் முனைவோராக மாற்றியதற்காக,

திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விசாகன் – சிறந்த முறையில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பை உருவாக்கியதற்காக,

சிவகங்கை மாவட்ட முன்னாள் கலெக்டர் ஜெயகாந்தன் – மாவட்டத்தில் நீர் நிலைகளை மீட்டு புனரமைத்ததற்காக,

திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் விஷ்ணு – பேறுகால இறப்புகளின் சதவீதத்தை குறைத்ததற்காக விருது வழங்கப்பட்டுள்ளது.

திருநங்கையர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றியதற்காக செங்கல்பட்டு மாவட்ட சமூக நல அலுவலருக்கு விருது வழங்கப்பட்டது.

மேலும், வேளாண் இயந்திரங்களை , ‘மொபைல் ஆப்’ வழியாக வாடகைக்கு விடும் திட்டத்தை அமல்படுத்திய தமிழ்நாடு வேளாண் பொறியியல் துறையின் முதன்மைப் பொறியாளருக்கும்,

சென்னையில் ஆதரவற்ற, மனநிலை பாதித்தோரை மீட்டு பராமரிக்கும் திட்டத்தை செயல்படுத்தியதற்காக சென்னை மாநகரப் போலீஸ் கமிஷனருக்கும் நல் ஆளுமை விருது வழங்கப்பட்டது.

சிறந்த மாநகராட்சியாக சேலம் தேர்ந்தெடுக்கப்பட்டது.

சிறந்த நகராட்சியாக ஸ்ரீவில்லிபுத்தூர்,குடியாத்தம், தென்காசி ஆகிய நகராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு அந்த நகராட்சி ஆணையர்கள், தலைவர்களுக்கு விருது வழங்கப்பட்டன.

சிறந்த பேரூராட்சிக்களாக, செங்கல்பட்டு மாவட்டம் கருங்குழி பேரூராட்சி, 2-வது கன்னியாகுமரி பேரூராட்சிக்கும் மூன்றாவது மதுரை மாவட்ட சோழவந்தான் பேரூராட்சியும் தேர்வு செய்யப்பட்டு முறையே 10 லட்சம், 5 லட்சம், 3 லட்சத்திற்கான காசோலை மற்றும் விருதுகள் வழங்கப்பட்டன.

விருதுகள் பெற்றவர்கள் முதலமைச்சருடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

  • க.சீனிவாசன்

வங்கியில் கொள்ளை : ஒரே பள்ளியில் பயின்றவர்கள் போட்ட திட்டம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share