எழும்பூர் அருங்காட்சியத்தில் காந்தி சிலை!

Published On:

| By srinivasan

சென்னை எழும்பூர் அருங்காட்சியக வளாகம், தேசிய கலைக்கூடம் எதிரில் மகாத்மா காந்தியின் சிலையினை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.

76ஆவது சுதந்திர விழா இன்று (ஆகஸ்ட் 15) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் 9 மணி அளவில் தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

ADVERTISEMENT

இதனை தொடர்ந்து சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் முடிந்த நிலையில் சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்துக்கு வருகை புரிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கலைக்கூடம் எதிரில் புதிதாக நிறுவப்பட்டுள்ள மகாத்மா காந்தியின் முழு உருவச் சிலை திறந்து வைத்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

மேலாடை துறந்து எளியவர்களைப் போல அரை ஆடை உடுத்திய காந்தியின் நூற்றாண்டு நினைவாகவும், 76வது சுதந்திரத் திருநாள் விழாவினை சிறப்பிக்கின்ற வகையிலும் காந்தியடிகளின் திருவுருவச் சிலையானது அமைக்கப்படுள்ளது.

ADVERTISEMENT

சென்னை மெரினா கடற்கரையில் ஏற்கெனவே காந்தியடிகளின் சிலை இருந்து வரும் நிலையில், சென்னை அரசு அருங்காட்சியக வளாகத்தில் காந்தியின் மற்றொரு முழு உருவச் சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • க.சீனிவாசன்

76 ஆவது சுதந்திர தினம் : 2ஆவது முறையாக கொடியேற்றிய மு.க.ஸ்டாலின்!

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share