நான் முதல்வன், பிஎம் வேலைவாய்ப்பு… சேர்க்கை முகாம் எப்போது?

Published On:

| By Selvam

நான் முதல்வன், பிஎம் வேலைவாய்ப்பு திட்டங்களின் கீழ் இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளித்து வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி தரும் வகையில், சென்னையில் இன்றும் நாளையும் (மார்ச் 10,11) சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது. Naan Mudhalvan PM internship

இதுதொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“இளைஞர்களுக்கான திறன் பயிற்சி அளித்து அவர்களுக்கான தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் வகையில் நான் முதல்வன், பிஎம் வேலைவாய்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 16 முதல் 35 வயதுக்குட்பட்ட வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து தொழில் வாய்ப்புகளுக்கு அவர்களை தகுதியானவர்களாக உருவாக்கும் வகையில் நான் முதல்வன் பயிற்சி திட்டம் தொடங்கப்பட்டது.

அதேபோல, பிஎம் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 21 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் வகையில் முன்னணி தனியார் நிறுவனங்களுடன் இணைந்து 12 மாதங்கள் கட்டணமில்லா இலவச திறன் பயிற்சி வழங்கப்படுகிறது.

இந்த பயிற்சிகளுக்கான சேர்க்கை முகாம்கள் சென்னை கிண்டி அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் இன்றும், வட சென்னை அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் நாளையும் நடைபெறுகிறது. விருப்பமுள்ள இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் இந்த சேர்க்கை முகாம்களில் பங்கேற்று இத்திட்டங்களின் கீழ் பயிற்சி பெறுவதற்காக விண்ணப்பிக்கலாம். இந்த பயிற்சியானது காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.

பயிற்சியில் சேரும் இளைஞர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகையாகவும், ரூ.6 ஆயிரம் ஒருமுறை மானியமாகவும் வழங்கப்படும். கூடுதல் விபரங்களுக்கு 044 – 25201163, 99466 40017 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளார். Naan Mudhalvan PM internship

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share