சென்னையில் பறிமுதல் செய்யப்பட்டு உரிமை கோரப்படாத, 973 வாகனங்களை ஏலம் விட போக்குவரத்து போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர். traffic police vehicles auction
இதுதொடர்பாக போக்குவரத்து போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உரிமை கோரப்படாத இருசக்கர வாகனங்கள் – 953, மூன்று சக்கர வாகனங்கள் – 11 மற்றும் நான்கு சக்கர வாகனங்கள்- 9 என மொத்தம் 973 வாகனங்கள் சென்னை, புதுப்பேட்டை காவல் ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் உள்ள மைதானத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாகனங்கள் மார்ச் 26 அன்று காலை 10 மணியளவில் பகிரங்க ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது. பகிரங்க ஏலத்திற்கான முன்பதிவு மார்ச் 19,20 ஆகிய நாட்களில் காலை 10 மணி முதல் 2 மணி வரை சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற உள்ளது.
அடையாள அட்டை மற்றும் GST பதிவெண் சான்றுடன் ஏலதாரர்கள் மட்டுமே முன்பதிவு கட்டணம் செலுத்த அனுமதிக்கப்படுவர்.
மார்ச் 26 அன்று காலை 10 மணியளவில் முன்பணம் செலுத்தி பதிவு செய்த ஏலதாரர்கள் மற்றும் ஏலக்குழுவினர் முன்னிலையில் பகிரங்க ஏலம் நடைபெறும். ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட வாகனங்களுக்கான ஏலம் தொகை மற்றும் GST தொகையினை மறுநாள் முழுவதுமாக செலுத்த வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. traffic police vehicles auction