கிச்சன் கீர்த்தனா: பஞ்சாபி எக் மசாலா

Published On:

| By Selvam

Punjabi Egg Masala Recipe

வாரத்தின் முதல் வேலை நாளான இன்று, சட்டென்று என்ன சமைக்கலாம் என்று நினைப்பவர்கள், வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே இந்த பஞ்சாபி எக் மசாலா செய்யலாம். இந்த மசாலா, வீட்டிலுள்ளவர்களின் காலை சிற்றுண்டிக்கு சைடிஷாகவும் வெளியில் செல்பவர்களின் லஞ்ச் பாக்ஸ் சாதத்துக்கு கிரேவியாகவும் பயன்படும்.

என்ன தேவை? Punjabi Egg Masala Recipe

வேக வைத்த முட்டை – 2
பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி – 2 (பேஸ்ட்டாக அரைக்கவும்)
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன்
மல்லித்தூள் (தனியா) – அரை டேபிள்ஸ்பூன்
ஆம்சூர் பவுட‌ர் – அரை டீஸ்பூன்
கரம் மசாலா – அரை டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப‌
பிரியாணி இலை – 1
சீரகம் – அரை டீஸ்பூன்
சர்க்கரை – ஒரு பிஞ்ச்
கஸுரி மேத்தி – ஒரு சிட்டிகை
நெய் – 50 மில்லி

அரைக்க…

முந்திரி – 10
பெரிய வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – ஒரு சின்ன துண்டு
பூண்டு – 20 கிராம்
பட்டை, கிராம்பு, கசகசா – எல்லாம் சேர்த்து ஒரு டேபிள்ஸ்பூன்

எப்படிச் செய்வது? Punjabi Egg Masala Recipe

வெந்நீரில் முந்திரியை பத்து நிமிடம் ஊற வைத்து, அரைக்க கொடுத்த மற்றவற்றுடன் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு மிக்ஸியில் மையாக அரைக்க‌வும். அடுப்பில் கடாயை வைத்து நெய் ஊற்றி சூடானதும் தீயைக் குறைத்து அரைத்த மசாலாவை போட்டு எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கி தனியாக எடுத்து வைக்கவும்.

அடுப்பில் கடாயை வைத்து அதில் சிறிது நெய் ஊற்றி பிரியாணி இலை, சீரகம், வெங்காயம் சேர்த்து நிறம் மாற‌ வதக்கவும். இதில் தக்காளி பேஸ்ட்,  மல்லித்தூள் (தனியா), மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், ஆம்சூர் பவுடர், கரம் மசாலா, கஸுரி மேத்தி, உப்பு, சர்க்கரை சேர்த்து வதக்கவும். வேக வைத்த முட்டையை இதில் சேர்த்து லேசாக‌ கிண்டவும். வதக்கிய மசாலாவை இதனுடன் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து ஐந்து நிமிடம் வேக வைத்து இறக்கி பரிமாறவும். Punjabi Egg Masala Recipe

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share