தமிழக அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் ரூ.20,881 கோடி வரை மூலதன திட்டங்களுக்கான கடன் பெற்றுள்ளது.
தமிழகத்தில் 2021 முதல் 2026 வரை திமுக ஆட்சி இருந்த போது தமிழகத்தின் மொத்த கடன் ரூ.10 லட்சம் கோடியாக உயர்ந்தது.
தமிழகத்தை பொறுத்தவரை மாநில சரக்கு மற்றும் சேவை வரி முத்திரைத்தாள் மற்றும் பதிவு கட்டணம், விற்பனை மற்றும் வர்த்தகம் மீதான வரி உள்ளிட்ட பல வகைகளில் வருவாய் கிடைத்து வருகிறது.
ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம் கடனுக்கான வட்டி உள்ளிட்ட பல்வேறு செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் கடன் பத்திரங்கள் விற்பனை, வங்கிகள் போன்றவற்றில் கடன்கள் வாங்கப்படுகின்றன.
இந்நிலையில் 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று கடந்த மே 10ம் தேதி விஜய் தலைமையிலான தவெக அரசு ஆட்சி அமைத்தது.
இதற்கிடையில் கடந்த ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாதங்களில் முதல் காலாண்டில் தமிழக அரசு ரூ.20,881 கோடி கடன் பெற்றுள்ளது. இதில் 22.82 சதவீதம் வரை நிலுவையில் உள்ள மொத்த கடன்களுக்கு ரூ.14,618 கோடி ரூபாய் வட்டி செலுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த ஆண்டு மட்டும் ரூ.1.22 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்க அரசு திட்டமிடப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதில் வட்டிக்கு, 76,452 கோடி ரூபாய் செலவு செய்யவும் அரசு திட்டமிட்டுள்ளது.
அந்த வகையில் மொத்த வருவாயில் வட்டியின் செலவு ரூ.22.82 சதவீதமாக உள்ளது.
இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோவில்,
ன் கடந்த மூன்று மாதங்களிலே ஏப்ரல் ,மே, ஜூன் வரையிலான காலங்களில் மட்டும் ரூபாய் 20,281 கோடி ரூபாய் த.வெ.க.அரசு கடன் வாங்கி இருக்கிறது. இந்த முழு ஆண்டிலே இன்னும் 1.22 லட்சம் கோடி கடன் வாங்க த.வெ.க அரசு திட்டமிட்டு உள்ளது. மாநில சரக்கு மட்டும் சேவை வரி, முத்திரைத்தாள் மற்றும் பத்திரப்பதிவு உள்ளிட்ட பல்வேறு வகைகளிலும் வரி வருவாய் வருகிறது. இந்நிலையில் தொடர்ந்து அரசு கடன் வாங்கும் இந்த நிலை எங்கே போகிறது. ஏற்கனவே தமிழகம் 10 லட்சம் கோடி கடனில் இருக்கிறது. நிர்வாக நடப்புக்கே கடன் வாங்கும் பொழுது நாட்டு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் உயிர் பெறுமா, உயிரற்று போகுமா பொறுத்திருந்து பார்க்கலாம் என தெரிவித்துள்ளார்.
