ராகுல் காந்தி ஆகஸ்ட் 1-ல் தமிழகம் வருகை!

Published On:

| By Mathi

Rahul Gandhi to Visit Tamil Nadu on August 1

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி (Rahul Gandhi) ஆகஸ்ட் 1-ந் தேதி தமிழகம் வருகை தருகிறார்.

ராகுல் காந்தியின் தமிழகம் வருகை குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் கூறுகையில், “சென்னை ஆகஸ்ட் 1-ந் தேதி காங்கிரஸ் கமிட்டியின் மாவட்ட தலைவர்கள் பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்கிறார்” என்றார்.

ADVERTISEMENT

இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்ட அறிக்கையில், “ஆகஸ்ட் 1 அன்று தமிழகம் எங்கள் அன்புத் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்களை உற்சாகத்துடன் வரவேற்கத் தயாராக உள்ளது!

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் (அமைப்பு) கே.சி. வேணுகோபால் அறிவித்தபடி, ராகுல் காந்தி அவர்கள் ஆகஸ்ட் 1 அன்று தமிழகம் வருகிறார்.

ADVERTISEMENT

அரசியலமைப்பைப் பாதுகாப்பது, ஜனநாயகத்தை வலுப்படுத்துவது, சமூக நீதி நிலைநாட்டுவது, இளைஞர்களின் எதிர்காலத்தை உறுதிப்படுத்துவது என்ற இலட்சியங்களுக்காக இடைவிடாது போராடி வரும் ராகுல் காந்தி அவர்களின் இந்த வருகை, தமிழக காங்கிரஸ் தொண்டர்களுக்கும் மக்களுக்கும் புதிய உற்சாகத்தையும் உத்வேகத்தையும் அளிக்கும்.

தமிழக மக்கள் சார்பிலும், தமிழக காங்கிரஸ் குடும்பம் சார்பிலும் அவருக்கு மனமார்ந்த வரவேற்பைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ADVERTISEMENT

2029-ல் ராகுல் காந்தி அவர்களை இந்தியாவின் பிரதமராக்கும் இலக்கை நோக்கி நம் பயணம் மேலும் வலுப்பெறட்டும்” என தெரிவித்துள்ளார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share