ADVERTISEMENT

தமிழக தேர்தல்: படையெடுத்த தலைவர்கள்.. அனல் பறந்த பிரசாரம்- இன்று மாலையுடன் நிறைவு!

Published On:

| By Mathi

Election Campaign Ends

தமிழக சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் இன்று ஏப்ரல் 21-ந் தேதி மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது.

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு ஒரே கட்டமாக ஏப்ரல் 23-ந் தேதி நடைபெற உள்ளது. மொத்தம் 4,023 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் களம் காண்கின்றனர். இத்தேர்தலில் 5.73 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

தமிழ்நாடு முழுவதும் 75,064 வாக்குச் சாவடிகள், 41 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் 23-ந் தேதி பதிவாகும் வாக்குகள் அனைத்தும் மே 4-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

இந்த தேர்தலுக்கான பிரசாரம் கடந்த சில நாட்களாக அனல் பறந்தது. பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா உள்ளிட்டோர் தீவிர பிரசாரம் செய்தனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், டெல்லி முன்னாள் முதல்வர் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார் உள்ளிட்டோர் தமிழகத்தில் பிரசாரம் செய்தனர்.

ADVERTISEMENT

தமிழகத்தில் அனல் பிறந்த பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share