திருமாவளவனை சந்திக்கும் தமிழக முதல்வர் விஜய்

Published On:

| By Pandeeswari Gurusamy

தமிழக முதல்வர் விஜய் இன்று காங்கிரஸ் அலுவலகம் மற்றும் விசிக தலைவர் இல்லத்திற்கு செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழக முதல்வராக விஜய் மே 10ஆம் தேதி பதவியேற்றார். அதைத் தொடர்ந்து நேற்று பெரம்பூர் சட்டமன்றத் கூட்டத்தில் பெரம்பூர் தொகுதி எம்எல்ஏவாகப் பதவியேற்றுக் கொண்டார்.

ADVERTISEMENT

நேற்றைய சட்டமன்றக் கூட்டத்திற்குப் பிறகு, முதல்வர் விஜய் திமுக தலைவர் ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரின் இல்லங்களுக்கு நேரில் சென்று வாழ்த்துகளைப் பெற்றார்.

இந்நிலையில், இன்று மாலை 3 மணி அளவில் விஜய் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவலகத்திற்கு தமிழக முதல்வர் விஜய் வருகை தர உள்ளார் என, டெல்லியில் உள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

பின்னர் இன்று மாலை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனை வேளச்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் மாலை 4 மணி அளவில் சந்திக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share