டிஜிட்டல் திண்ணை: எடப்பாடிக்கு ஓகே சொன்ன ஸ்டாலின்.. உதயநிதிக்கு விஜய்..?

Published On:

| By Mathi

Digital Thinnai Udhayanidhi Vijay

வைஃபை ஆன் செய்ததும், ”அய்யாதுரை அய்யாதுரை இது சுயநல பூமி அய்யாதுரை” பாடலை பாடியபடியே விறுவிறுவென டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்..

என்ன ப்ரோ.. இவ்வளவு வேகமா இருக்கீங்க..

கையில ஒரு மேட்டர் இருக்கே.. ஷேர் செஞ்சுடுவோம்னுதான்..

ADVERTISEMENT

அப்படி என்ன விஷயம் ப்ரோ?

சொல்றேன் கேளுங்க.. 2021-ல் ஆட்சி மாறியதுல எதிர்க்கட்சித் தலைவரா இருந்தாரு எடப்பாடி பழனிசாமி.. அவர் சிஎம்மா இருந்தப்ப க்ரீன்வேஸ் ரோட்டுல இருந்த அதே வீட்டுலேயே தொடர்ந்து இருந்துக்கிறேன்னு அப்ப பொதுப்பணித் துறை அமைச்சரா இருந்த எ.வ.வேலுவிடம் கேட்டுகிட்டாரு.. எ.வ.வேலும் சிஎம்மா இருந்த ஸ்டாலின் கிட்ட, “தனக்கு சென்னையில வீடு இல்லைங்கிறதால ஏற்கனவே இருந்த வீட்டுலேயே இருந்துக்கிறேன்”னு எடப்பாடி சொன்ன விஷயத்தை சொன்னார்.. சிஎம்மா இருந்த ஸ்டாலினும் அதிகாரிகள்கிட்ட கன்சல்ட் பண்ணிட்டு எடப்பாடிக்கு ஓகே சொன்னாரு.. அதனால கிரீன்வேஸ் ரோடு இல்லத்துல தொடர்ந்து இருந்துகிட்டாரு எடப்பாடி..

இப்ப யாருக்கு யாருக்கு வீடு கேட்கிறாங்களாம் ப்ரோ?

இப்ப எலக்‌ஷன் முடிஞ்சிருச்சு.. அதே கிரீன்வேஸ் ரோட்டுல குறிஞ்சி இல்லத்துல இருக்கிற பெரிய பங்களாவில குடியிருக்கிற மாஜி துணை முதல்வரான இன்றைய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அதே பங்களாவில் தொடர்ந்து இருக்கலாம்னு நினைக்கிறார்.. ஏன்னா அவரோட வீடுபனையூரில் இருக்கு.. பனையூரில சிஎம் விஜய் பங்களாவுக்கு பக்கத்து தெருவிலதான் அவரோட வீடு இருக்கு… அங்கே போய் இருக்கிறது சரியா இருக்காதுன்னு குறிஞ்சி இல்லம் பங்களாவிலேயே தொடர்ந்து இருக்கலாம்னு விரும்பி இருக்கிறார்.

ADVERTISEMENT

இந்த தகவல் சிஎம் விஜய் காதுக்கும் போனப்ப, ”அப்படியா யோசிப்போம்”னு சொல்லி இருக்கிறாராம் ப்ரோ என்றபடியே டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டியபடியே ஆப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.

ADVERTISEMENT
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share