ஆக.5-ல் பட்ஜெட்: நாளை 10 அமைச்சர்கள் பங்கேற்கும் 5 ஆலோசனை கூட்டங்கள்!

Published On:

| By Mathi

udget on August 5: 5 Consultative Meetings Involving 10 Ministers Tomorrow

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசின் முதலாவது பட்ஜெட் ஆகஸ்ட் 5-ந் தேதி தாக்கல் செய்யப்படும் நிலையில் தலைமை செயலகத்தில் ஆலோசனைக் கூட்டங்கள் பரபரப்பாக நடந்து வருகின்றன.

தமிழ்நாட்டில் திமுக, அதிமுக ஆகிய திராவிடர் இயக்க கட்சிகளின் ஆட்சி 59 ஆண்டுகள் நடைபெற்றது. இந்த திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்கு மாற்றாக முதல் முறையாக முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியில் அமர்ந்துள்ளது.

ADVERTISEMENT

தேர்தல் நேரத்தில் முதல்வர் விஜய் அளித்த வாக்குறுதிகள் எப்போது நிறைவேற்றப்படும்? என்கிற எதிர்பார்ப்பும் இருந்து வருகிறது. இந்த நிலையில் ஆகஸ்ட் 5-ந் தேதி முதல்வர் விஜய் அரசின் முதலாவது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

பெண்களுக்கு மாதம் ரூ.2,500; வேலையில்லாத பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.4,000 உள்ளிட்டவை குறித்த அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இடம் பெறும் என்கிற எதிர்பார்ப்பு உள்ளது.

ADVERTISEMENT

தமிழக அரசின் தலைமை செயலகத்தில் பட்ஜெட் தொடர்பான ஆலோசனைக் கூட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நாளை திங்கள்கிழமையன்றும் மாலை 3 மணிக்கு 5 ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. மொத்தம் 10 அமைச்சர்கள் இந்த ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்க உள்ளனர்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share