தமிழகத்தில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் இன்று (அக்டோபர் 21) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
காவலர் வீரவணக்க நாள் நிகழ்வில், உயிர்நீத்த காவலர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவதற்காக முதல்வர் விஜய் இன்று டிஜிபி அலுவலகத்திற்கு வருகை தந்தார். பணியின்போது உயிரிழந்த காவலர்களின் குடும்பங்களுக்கு ரூ.5.96 கோடி மதிப்பிலான விபத்துக் காப்பீட்டுத் தொகையை வழங்கினார். இதைத்தொடர்ந்து இன்று 3 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பணியிட மாற்றம் குறித்த விபரம்
பொருளாதாரக் குற்றப்பிரிவு ஐஜியாக இருந்த சந்தோஷ் குமார் ஐபிஎஸ், தற்போது சிவில் சப்ளைஸ் சிஐடி ஐஜியாக மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார். ஏற்கனவே அந்தப் பதவியில் இருந்த ரூபேஷ் குமார் மீனாவுக்குப் பதிலாக இவர் தற்போது நியமிக்கப்பட்டிருக்கிறார்.
ஏற்கெனவே சிவில் சப்ளைஸ் சிஐடி ஐஜியாக இருந்த ரூபேஷ் குமார் மீனா,தற்போது திருச்சி மாநகரக் காவல் ஆணையராகப் பதவி உயர்வுடன் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்.
திருச்சி மாநகரக் காவல் ஆணையராக இருந்த ஐபிஎஸ் காமினி, சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார். டிஜிபி அலுவலகத்தில் நிர்வாகப் பிரிவு ஐஜியாக இவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
