17 மாவட்டங்களில் நாளை ’உக்கிரமாக’ களமிறங்கும் வடகிழக்கு பருவமழை- வானிலை மையம் வார்னிங்!

Published On:

| By Mathi

IMD-Rain- Weather report

தமிழகத்தில் நாளை (அக்டோபர் 22-ந் தேதி) 17 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (அக்டோபர் 21-ந் தேதி) வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ADVERTISEMENT
  • நீலகிரி
  • கோவை
  • திண்டுக்கல்
  • தேனி
  • மதுரை
  • விருதுநகர்
  • தென்காசி
  • திருநெல்வேலி
  • கன்னியாகுமரி
  • தூத்துக்குடி
  • சிவகங்கை
  • புதுக்கோட்டை
  • தஞ்சாவூர்
  • திருவாரூர்
  • நாகப்பட்டினம்
  • கடலூர்
  • மயிலாடுதுறை ஆகிய 17 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 23-ந் தேதி

அக்டோபர் 23-ந் தேதி நீலகிரி, கோவை, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், விழுப்புரம், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய 20 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அக்டோபர் 23-ந் தேதி மொத்தம் 23 மாவட்டங்களுக்கு கனமழை மற்றும் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அக்டோபர் 24-ந் தேதி

அக்டோபர் 24-ந் தேதியும் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு, திருப்பூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய 17 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அக்டோபர் 24-ந் தேதி மொத்தம் 20 மாவட்டங்களுக்கு கனமழை மற்றும் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வானிலை ஆய்வு மையத்தின் முன்னறிவிப்பின்படி, மஞ்சள் எச்சரிக்கை என்பது 64.5 மி.மீ. முதல் 115.5 மி.மீ. வரையிலான கனமழையையும், ஆரஞ்சு எச்சரிக்கை என்பது 115.6 மி.மீ. முதல் 204.4 மி.மீ. வரையிலான மிக கனமழையையும் குறிக்கிறது.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை தொடர வாய்ப்புள்ளது.

Photo of author
Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share