புதுச்சேரியில் தேமுதிக-தமாக-மக்கள் நலக் கூட்டணியில் தேமுதிக-வுக்கு 4 சீட் ஒதுக்கபட்டது. தேமுதிக பொருப்பாளர் செல்வம் விசிக-வை விட ஒரு சீட் அதிகமாக வேண்டும் என்று கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் வெளியேறினார். அப்போதே மின்னம்பலம்.காம் இணைய இதழில் மக்கள் நலக் கூட்டணி கலைந்தது என்ற செய்தி வெளியிட்டுயிருந்தோம். இந்நிலையில், இன்று(ஏப்ரல் 18) மீண்டும் கூட்டணி கட்சியினர் கூடி, இரண்டு சீட் கூடுதலாக தருவதாக பேசப்பட்டுள்ளது. அதற்கு செல்வம், முதலியார்பேட்டை உழவர்கரை தொகுதி வேண்டும் என்று அடம்பிடித்து வெளியேறியுள்ளார். இதனால் கூட்டணியில் விரிசல் அதிகமாகிவருகிறது என்றார்கள் கூட்டணியில் உள்ளவர்கள்.
புதுச்சேரியில் முரண்டுபிடிக்கும் தேமுதிக
By Balaji
|
Published on 18 Apr 2016, 12:00 AM
உண்மையின் மூச்சு உங்கள் விரலில்
மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel








