ஜெயலலிதாவின் பொதுக்கூட்டத்தில் தொடர்ந்து உயிர்ப்பலிகள் நடந்து வருகின்றன. விருத்தாசலத்தில் இருவர், அருப்புக்கோட்டையில் ஒருவர், நேற்று சேலம் மகுடஞ்சாவடியில் இருவர் என இதுவரை 5 பேர் பலியாகிவிட்டனர். இந்நிலையில், டெல்லியில் உள்ள தேசிய மனித உரிமை ஆணையத்தில் ஜெயலலிதாமீது நடவடிக்கை எடுக்குமாறு தேமுதிக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக பலிகள் நடந்துவருவதைக் குறித்த விவரங்கள் மனுவில் குறிப்பிடப்படுள்ளன. இதுபோன்ற பலிகள் இனி ஏற்படாமல் தடுக்க மனித உரிமை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மீது மனித உரிமை ஆணையத்தில் புகார்
By Balaji
|
Published on 21 Apr 2016, 12:00 AM
உண்மையின் மூச்சு உங்கள் விரலில்
மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel








