கட்டியை அகற்றி சென்னை மருத்துவர்கள் சாதனை!

By Balaji

|

Published on 1 Feb 2018, 12:00 AM

உலகிலேயே முதல்முறையாக இளைஞர் ஒருவரின் முகத்தில் இடது பக்கம் முழுவதும் பரவியிருந்த கட்டியை அகற்றி சென்னை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

வங்கதேசத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவரான சஜிப் பரூவா என்ற இளைஞருக்கு சுமார் 4 ஆண்டுகளாக முகத்தின் கீழ்தாடையிலிருந்து உதடு, மேல்உதடு, கன்னம், நெற்றி வரை வீக்கமாக இருந்தது. இதன் காரணமாக வங்கதேசத்தில் உள்ள மருத்துவமனையில் 4 ஆண்டுகளாகச் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் 4 ஆண்டுகளாகச் சிகிச்சை பெற்றும் பலனில்லாததால், சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைபெற வந்தார். இதையடுத்து கடந்த ஆண்டு (2017) நவம்பர் மாதம் சென்னை கீழ்ப்பாக்கத்திலுள்ள லிமா லைஃப்லைன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

ADVERTISEMENT

சஜிப் பரூவாவைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவரது முகத்தின் இடது கன்னத்தில் உள்பக்கமாக கட்டி இருந்ததையும், இந்தக் கட்டியினால் அவரது மூளை பாதித்திருப்பதையும் கண்டுபிடித்தனர்.

பின்னர் இந்தக் கட்டியை அகற்ற அறுவைச் சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவெடுத்தனர். இதைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதத்தில் காது, மூக்கு, தொண்டை, கண், நரம்பியல், பல் மருத்துவர்கள் கொண்ட குழுவினர் சுமார் 8 மணி நேரம் அறுவைச் சிகிச்சை செய்தார்கள்.

ADVERTISEMENT

இந்த அறுவைச் சிகிச்சையில் மருத்துவர்கள் முகத்தை நேர்த்தியாகப் பாதியாக அறுத்து, உள்பக்கமாக இருந்த கட்டியை அகற்றினார்கள். இந்த அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்து சென்னை மருத்துவர்கள் சாதனை செய்துள்ளனர். அதன் பின் தற்போது சஜிப் பரூவாவின் முகத்தில் அறுவைச் சிகிச்சை செய்த தழும்பு மறைய ஆரம்பித்து மிக மிக மெல்லியதாகவே தெரிகிறது. அவருடைய முகம் பழைய நிலைக்கு மாறிவருகிறது.

உலகிலேயே இதுபோன்ற அறுவை சிகிச்சை செய்யப்பட்டது இதுதான் முதல் முறை என்று அறுவைச் சிகிச்சை செய்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

மருத்துவம் வளர்ந்துவரும் நிலையில் மருத்துவர்கள் பல்வேறு அறுவைச் சிகிச்சைகள் செய்து சாதனை புரிந்துவருகிறார்கள். அந்த வகையில் சென்னையில் அரசு மருத்துவர்களும், தனியார் மருத்துவர்களும் தொடர்ந்து பல்வேறு அறுவைச் சிகிச்சைகளை செய்து சாதனை செய்கிறார்கள்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel