ADVERTISEMENT

வைட்டமின் டி மற்றும் பி12 குறைபாடு அறிகுறிகள் என்னென்ன? தடுப்பது எப்படி?

Published On:

| By Santhosh Raj Saravanan

 symptoms of vitamin D and B12 deficiency How to prevent

வைட்டமின் டி மற்றும் பி12 குறைபாடுகளின் அறிகுறிகள் என்ன, அவற்றை தடுப்பது எப்படி என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

மாறிவரும் வாழ்க்கை முறைகள், சூரிய ஒளியைத் தவிர்த்தல் மற்றும் சத்துள்ள உணவுகளை சாப்பிடாதது  ஆகியவற்றின் காரணமாக, வைட்டமின் டி மற்றும் பி12 குறைபாடுகள் பெருகி வருகின்றன. இந்த இரண்டு வைட்டமின்களும் நமது உடலுக்கு இன்றியமையாதவை, மேலும் இவற்றின் குறைபாடு பல உடல்நல மற்றும் மனப் பிரச்சனைகளுக்கு காரணமாக அமைகின்றன. ஆகவே, இரண்டு வைட்டமின் குறைபாடுகளின் அறிகுறிகள், அவற்றை தடுப்பது குறித்துப் பார்க்கலாம். முதலில் வைட்டமின் டி, வைட்டமின் பி12 அளவுகளை தெரிந்துகொள்ள முதலில் ரத்த பரிசோதனை செய்ய வேண்டும். இரண்டு பிரச்சனைகளையும் தொடக்கத்திலேயே கண்டறிவது அதனை எளிதில் கட்டுப்படுத்த வழிவகுக்கும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
வைட்டமின் டி குறைபாட்டின் அறிகுறிகள்

எலும்புகள், தசைகள் மற்றும் நோய் எதிர்ப்பு அமைப்புக்கு வைட்டமின் டி (vitamin D deficiency)  மிகவும் முக்கியமானதாகும்.  வைட்டமின் டி குறைபாடு காரணமாக அடிக்கடி சோர்வு மற்றும் பலவீனம் ஏற்படும். அதேபோல எலும்பு மற்றும் மூட்டு வலி, தசைப்பிடிப்பு அல்லது பலவீனம் ஏற்படலாம். அடிக்கடி சளி அல்லது நோய்த்தொற்றுகள், மனச்சோர்வு, எரிச்சல் அல்லது மன அழுத்தம் ஆகியவையும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

வைட்டமின் டி குறைபாட்டை சரிசெய்வது எப்படி?

நாள்தோறும் காலையில் 20-30 நிமிடங்கள் சூரிய ஒளியில் இருக்க வேண்டும். உணவில் முட்டை, கொழுப்பு நிறைந்த மீன்,  பால்/தயிர் ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். மருத்துவரின் ஆலோசனைப்படி வைட்டமின் டி3 சப்ளிமெண்ட்ஸ் (Vitamin D3 supplements) எடுத்துக் கொள்ள வேண்டும்.

ADVERTISEMENT
வைட்டமின் பி12 குறைபாட்டின் அறிகுறிகள்

நரம்பு மற்றும் ரத்த செயல்பாட்டிற்கு வைட்டமின் பி12  (B12 deficiency symptoms) மிகவும் முக்கியமானதாக உள்ளது. நீண்டகாலம் வைட்டமின் பி12 குறைபாடு இருப்பது உங்கள் உடலில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். வைட்டமின் பி12 காரணமாக தொடர்ச்சியான சோர்வு மற்றும் பலவீனம் ஏற்படும். கைகளிலும், கால்களிலும் கூச்ச உணர்வு அல்லது மரத்துப்போதல்,நினைவாற்றல் இழப்பு, குழப்பமான மனநிலை, தலைச்சுற்றல் ஏற்படலாம். இதேபோல  மூச்சுத் திணறல், நாக்கு சிவந்து வீங்குதல், வாய்ப் புண்கள், ரத்தசோகை, கடுமையான சந்தர்ப்பங்களில் நரம்பு பாதிப்பு கூட ஏற்பட வாய்ப்புள்ளது.

வைட்டமின் பி12 குறைபாட்டை தடுப்பது எப்படி?

உணவில் பால், தயிர், முட்டை, மீன் மற்றும் இறைச்சி ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். சைவ உணவு உண்பவர்கள் வைட்டமின் பி12 (how to prevent vitamin B12 deficiency) செறிவூட்டப்பட்ட உணவுகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும். தேவைப்பட்டால், மருத்துவரின் ஆலோசனைப்படி பி12 மாத்திரைகள் அல்லது ஊசிகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share