சிறுவயதில் ஆர்எஸ்எஸ் முகாமில் நடந்த பாலியல் அத்துமீறலால் பாதிக்கப்பட்ட இளைஞர் மன சோர்வால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் கடந்த வியாழனன்று திருவனந்தபுரம் மத்திய ரயில் நிலையம் அருகே விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் நிலையில் சடலமாக கண்டறியப்பட்டார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இதில் தற்கொலை செய்து கொண்டவர் எலிகுளம் கிராம பஞ்சாயத்து எல்லைக்கு உட்பட்ட வஞ்சிமலையை சேர்ந்த அனந்து அஜி (26) என்ற ஐ.டி ஊழியர் என்பது தெரியவந்தது.
அனந்து அஜி இறப்பதற்கு முன் தனது இன்ஸ்டா பதிவில் வெளியிட்டுள்ள 7 பக்க கடிதத்தில், தான் 4 வயதில் பாலியல் அத்து மீறலுக்கு உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் அதில் ” நான் தற்கொலை செய்து கொள்வதற்கு பெண், காதல் விவகாரம், கடன் பிரச்சனை அல்லது வேறு எதுவும் காரணம் இல்லை. எனது பதற்றம் மற்றும் மன சோர்வுதான் காரணம்.
எனக்கு ஒரு நபர் ஒரு அமைப்பைத் தவிர வேறு யாரிடமும் கோபம் இல்லை. அந்த அமைப்பு ஆர்.எஸ்.எஸ். தான். என் தந்தை என்னை ஆர்எஸ்எஸ்-ல் சேரச் செய்தார்.
நான் ஆர்.எஸ்.எஸ்-ன் பல உறுப்பினர்களால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளானேன். உடல் ரீதியான தாக்குதலுக்கும் உள்ளானேன். ஆர்எஸ்எஸ் முகாம்களில் பாலியல் மற்றும் உடல் ரீதியான துஷ்பிரயோகம் பரவலாக உள்ளது. இதற்கு எந்த ஆதாரமும் இல்லாததால் இதை பலர் நம்பாமல் போகலாம் என்று எழுதி உள்ளார்.
அனந்துவின் இந்த பதிவும், தற்கொலையும் கேரள அரசியல் வட்டாரத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆர்.எஸ்.எஸ் நாட்டுக்கே ஒரு அச்சுறுத்தல்
இது குறித்து ஆர்ஜேடி செய்தி தொடர்பாளர் பிரியங்கா பாரதி , தனது எக்ஸ் பதிவில், “ஆர்எஸ்எஸ் உறுப்பினருடன் ஒருபோதும் நட்பு கொள்ளாதீர்கள். நண்பராக மட்டும் அல்ல, அவர் உங்கள் குடும்பத்தினர், தந்தை, சகோதரர் அல்லது மகனாக இருந்தாலும் கூட, அவர்களை உங்கள் வாழ்க்கையிலிருந்து விலக்கி வையுங்கள். அவர்கள் விஷமிகள். அவர்கள்தான் உண்மையான துஷ்பிரயோகிகள்,” என்று தன்னுயிர் மாய்த்துக் கொண்ட ஐடி தொழிலாளர் அனந்து ஆஜி, தன் “இறுதி இன்ஸ்டா பதிவில்” எழுதியிருந்தார். பல ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதால் அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
ஆர்எஸ்எஸ் நாட்டுக்கே ஒரு அச்சுறுத்தல்.” என்று தெரிவித்துள்ளார்.
