சாப்பிட மாட்டேன்னு அடம் பிடிக்குதா குழந்தை? கோவப்படாம, மிரட்டாம புது உணவுகளை பழக்க வைக்கும் ‘ஸ்ட்ரெஸ்-ஃப்ரீ’ வழிகள்!

Published On:

| By Santhosh Raj Saravanan

stress free strategies to introduce new foods to stubborn picky eating toddlers

“ஆசை ஆசையா சத்து நிறைஞ்ச காய்கறியையோ அல்லது பழங்களையோ சமைச்சு தட்டுல வச்சா… அதைத் தொட்டுக்கூட பார்க்காம (Picky Eating Toddlers) முகத்தைத் திருப்பிக்கிட்டு அடம் பிடிக்குறாங்களா? ‘இதைச் சாப்பிடலனா அவ்வளவுதான்!’னு மிரட்டி, பின்னாடியே தட்டை வச்சுக்கிட்டு ஓடி ஓடி உங்களுக்கே பிபி (BP) ஏறிடுதா?”

இரண்டு முதல் ஐந்து வயது வரை உள்ள குழந்த வச்சிருக்கோங்க வீட்ல தினமும் மூணு வேளையும் நடக்குற ஒரு பெரிய யுத்தம் இதுதான். இந்த வயசுல குழந்தைகளுக்கு நியோஃபோபியா‘ (Neophobia) எனப்படும் புதிய உணவுகளைப் பார்த்தாலே பயப்படும் குணம் இயற்கையிலேயே இருக்கும். அதுமட்டுமில்லாம, “நான் தனி ஆள், எனக்கும் சுயமரியாதை இருக்கு”ன்னு அவங்களோட சுதந்திரத்தைக் காட்ட அவங்க எடுக்குற ஆயுதம்தான் இந்த ‘அடம் பிடித்தல்’.

ADVERTISEMENT

குழந்தைகளை அடிக்காம, திட்டாம, உங்களுக்கும் மன உளைச்சல் இல்லாம அவங்களுக்குப் புதிய ஆரோக்கியமான உணவுகளை எப்படிச் ஸ்மார்ட்டாகப் பழக்கலாம் என்று இந்த பதிவில் பார்ப்போம்!

அடம் பிடிக்கும் குழந்தைகளுக்குப் புது உணவுகளைக் கொடுக்கும் 4 மேஜிக் வித்தைகள்

1. பொறுப்புப் பகிர்வு விதி (Division of Responsibility)

ADVERTISEMENT

பேரண்டிங் உலகில் மிகவும் புகழ்பெற்ற விதி இது. சாப்பாட்டு விஷயத்தில் உங்களுக்கும் உங்க குழந்தைக்குமான பொறுப்பை இரண்டாகப் பிரிக்க வேண்டும்.

  • உங்களது பொறுப்பு: என்ன உணவு சமைக்க வேண்டும், எப்போது சமைக்க வேண்டும், எங்கு அமர்ந்து சாப்பிட வேண்டும் என்பதை பெற்றோராகிய நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
  • குழந்தையின் பொறுப்பு: பரிமாறப்பட்ட உணவில் எதைச் சாப்பிட வேண்டும், எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதை அவங்கதான் முடிவு செய்யணும். “இன்னும் ரெண்டு வாய் சாப்பிடு” என்று கட்டாயப்படுத்தக் கூடாது. தட்டை வச்சதும் அவங்க சாப்பிடலனா, அமைதியாகத் தட்டை எடுத்து ஓரமாய் வச்சுடுங்கள். பசிக்கும் போது அவங்களே தேடி வருவாங்க!

2. ‘ஃபுட் செயினிங்’ ஹேக் (Food Chaining லிங்க் செய்யும் வித்தை)

ADVERTISEMENT

குழந்தைக்கு ஏற்கனவே பிடித்த ஒரு உணவோடு, ஒரு புதிய உணவை லேசாக லிங்க் செய்து கொடுக்க வேண்டும்.

  • உதாரணம்: உங்களது குழந்தைக்கு உருளைக்கிழங்கு ப்ரை (Potato fry) பிடிக்கும்னா, அதே வடிவம் மற்றும் சுவையில் சர்க்கரைவள்ளிக் கிழங்கு (Sweet potato) அல்லது கேரட்டை லேசாக மிக்ஸ் செய்து கொடுக்கலாம். தோசை பிடிக்கும்னா, பீட்ரூட் சாறு கலந்து ‘வண்ண தோசை’ ஆக்கலாம். அறிமுகமில்லாத புது உணவை விட, தெரிந்த உணவோடு வரும் புது உணவு தோற்றுப்போகாது.

3. ‘15-முறை’ கோல்டன் ரூல் (The 15-Times Rule)

நம்மில் பலரும் ஒரு புது உணவைக் கொடுத்து குழந்தை துப்பிவிட்டால், “என் குழந்தைக்கு இது பிடிக்காது” என்று அதோடு நிறுத்திவிடுவோம். ஆனால், சைல்டு நியூட்ரிஷன் எக்ஸ்பர்ட்ஸ் என்ன சொல்றாங்கன்னா, ஒரு குழந்தையோட நாக்கு ஒரு புது சுவையை ஏத்துக்க 10 முதல் 15 முறை அந்த உணவை அவங்க பார்க்கவோ அல்லது டேஸ்ட் செய்யவோ வேண்டியிருக்கும். எனவே, முதல் முறையிலேயே சோர்ந்து போகாமல், சில நாட்கள் கேப் விட்டு விட்டு வெவ்வேறு வடிவங்களில் (மசியலாக, பொரியலாக) கொடுத்துப் பாருங்கள்.

4. உணவோடு விளையாட்டு (Fun Presentation)

காரமான, கசப்பான உணவுகள் என்று குழந்தைகளுக்குப் புரியாது. அவர்களுக்குப் பார்ப்பதற்கு அழகாக இருந்தால் மட்டுமே சாப்பிடத் தோன்றும்.

  • கிரியேட்டிவ் பெயர்கள்: பிரக்கோலி அல்லது கீரையைச் சும்மா கொடுக்காமல் “இதோ பாரு குட்டி மரங்கள் (Baby Trees)” என்றோ, கேரட்டை “சூப்பர்மேன் பவர் கேரட்” என்றோ கதைகள் கூறி ஊட்டலாம். உணவுகளைக் குட்டி குட்டி வடிவங்களாக (Star, Heart shapes) வெட்டிப் பரிமாறலாம்.
பழைய கட்டாய முறை VS மாடர்ன் ஸ்ட்ரெஸ்-ஃப்ரீ முறை
பழைய கட்டாய முறை (Force-Feeding)மாடர்ன் ஸ்ட்ரெஸ்-ஃப்ரீ முறை (Stress-Free)
“சாப்பிடலனா பூச்சாண்டி வந்திடுவான்” என மிரட்டுவது.“சாப்பிட்டா உனக்கு நல்ல எனர்ஜி கிடைக்கும்” எனப் புரிய வைப்பது.
பிடிக்காத காய்கறிகளைத் தட்டில் குவித்து வைப்பது.பிடித்த உணவோடு 90% + புதிய உணவு 10% என்ற அளவில் வைப்பது.
மொபைல் போன் அல்லது டிவியைக் காட்டி ஏமாற்றி ஊட்டுவது.உணவின் சுவையை ரசித்துத் தானாகச் சாப்பிட வைப்பது.
சைல்டு நியூட்ரிஷன் எக்ஸ்பர்ட்டின் அதிரடி எச்சரிக்கை (Strict Warnings for Parents):
  • லஞ்சம் கொடுக்காதீங்க!  “நீ இந்த காய்கறியைச் சாப்பிட்டா உனக்கு சாக்லேட் தருவேன் அல்லது 10 நிமிஷம் போன் தருவேன்” என்று ஒருபோதும் லஞ்சம் (Bribing) கொடுக்கக் கூடாது. இப்படிச் செய்தால், உங்களது குழந்தையின் மூளையில் “காய்கறி என்பது ஒரு மோசமான விஷயம், சாக்லேட் தான் நல்ல விஷயம்” என்ற எண்ணம் ஆழமாகப் பதிந்துவிடும்.
  • உணவை மறைத்து ஏமாற்றக் கூடாது: சில அம்மாக்கள் கீரையை சப்பாத்தி மாவுக்குள் மறைத்துத் தெரியாமல் ஊட்டுவார்கள். எப்போதாவது இது ஓகே, ஆனால் எப்போதும் இப்படியே செய்தால் குழந்தைகளுக்கு உணவின் அசல் சுவை தெரியாமலேயே போய்விடும். அதுமட்டுமின்றி, தங்களுக்குத் தெரியாமல் ஏதோ கலக்கப்பட்டிருக்கிறது என்று தெரிந்தால் அவங்களுக்கு உணவின் மீதான நம்பிக்கையே போய்விடும்.

நன்றி: ஸ்ரீவித்யா மாரியப்பன், எழுத்தாளர் மற்றும் தொடர்பாடல் நிபுணர்

Photo of author
Santhosh Raj Saravanan
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share