கல்குவாரி உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ்!

Published On:

| By Kavi

தமிழ்நாடு கல்குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்களின் காலவரையறையற்ற வேலை நிறுத்த போராட்டம் இன்று (ஜூலை 4) வாபஸ் பெறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கல்குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் சங்கம் கடந்த 26.6.2023 முதல் பல்வேறு கோரிக்கைகளை முன்நிறுத்தி காலவரையறையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தது. கல்குவாரி விதிமுறைகளில் தளர்வு வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தினர்.

ADVERTISEMENT

இந்நிலையில் கடந்த ஜூலை 3ஆம் தேதி நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில், இயற்கை வளங்கள் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி மற்றும், புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநர் நிர்மல்ராஜ் ஆகியோர் முன்னிலையில் தமிழ்நாடு கல்குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இக்கூட்டத்தில், சங்க உறுப்பினர்கள் முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தையும் ஒரு குழு அமைத்து ஆராய்ந்து தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்ற உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இந்தசூழலில் இன்று (ஜூலை 4)வேலை நிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக சங்க உறுப்பினர்கள் அனைவரும் ஏகமனதாக முடிவெடுத்து அறிவித்துள்ளனர்.

இன்று முதல் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கல்குவாரி மற்றும் கிரஷர்களும் இயங்கும் என்று அறிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

பிரியா

கல்லூரிகளில் சேர்ந்து விலகும் மாணவர்கள்: யுஜிசி முக்கிய அறிவிப்பு!

“விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்போம்” – அமைச்சர் உதயநிதி

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share