கல்லூரிகளில் சேர்ந்து விலகும் மாணவர்களின் முழு கட்டணத்தையும் திருப்பி தர வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) உத்தரவிட்டுள்ளது.
நடப்பு கல்வியாண்டிற்கான கல்லூரி மாணவர் சேர்க்கை, வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலாமாண்டு சேரும் மாணவர்கள் வேறு கல்லூரியில் சேர விரும்பினால், அவர்கள் செலுத்தும் கட்டணம் திருப்பி தரப்படுவதில்லை என்று பெற்றோர்கள் தரப்பில் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன.
இந்நிலையில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு ஒரு முக்கிய சுற்றறிக்கையை யுஜிசி இன்று (ஜூலை 4) அனுப்பியுள்ளது. அதில், நடப்பு கல்வியாண்டில் கல்லூரிகளில் சேர்ந்து பின்னர் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் விலகும் மாணவர்களுக்கு, அவர்கள் செலுத்திய முழு கட்டணத்தையும் திருப்பி தர வேண்டும்.
செப்டம்பர் 30 ஆம் தேதியிலிருந்து அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் கல்லூரிகளில் இருந்து விலகும் மாணவர்களிடம் ரூ.1000 சேவை கட்டணம் மட்டுமே பிடித்தம் செய்ய வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மோனிஷா
இட ஒதுக்கீட்டுக்கு எதிராக வழக்கு: அபராதம் விதித்த உச்ச நீதிமன்றம்!
ஜெயலலிதாவின் புடவைகள், தங்க வைர நகைகள் : விஜிலன்ஸுக்கு பறந்த கடிதம்!