ஸ்டார் : ட்விட்டர் விமர்சனம் இதோ!

Published On:

| By christopher

கவின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “ஸ்டார்’ இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இயக்குநர் இளன் தான்  “ஸ்டார்” படத்தை இயக்கியுள்ளார்.

ரைஸ் ஈஸ்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா என இரண்டு நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தின் போஸ்டர்கள், புரோமோ வீடியோக்கள் மற்றும் பாடல் வீடியோ, டிரெய்லர் ஆகியவை வெளியாகி ரசிகர்களின் மிகப்பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த படத்தில் கவினுடன் நடிகர்கள் லால், அதிதி போஹங்கர், பிரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் உள்ளிட்டோர்  முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஸ்டார் படத்தின் ப்ரீமியர் ஷோ நேற்று நடைபெற்ற நிலையில், அதுமுதலே ஸ்டார் படத்திற்கான் பாசிட்டிவான விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. குறிப்பாக கவினின் அபாரமான நடிப்பும், இளனின் திரைக்கதை வடிவமைப்பும் பாராட்டுகளை பெற்று வருகின்றன.

இந்த நிலையில் ட்விட்டர் தளத்தில் ஸ்டார் திரைப்படம் பார்த்த ரசிகர்களின் விமர்சனங்கள் இதோ!

https://twitter.com/Kavin_subin/status/1788845408850223292

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

சந்திக்க தயாரா? : மாணவர்களுக்கு விஜய் கொடுத்த ஸ்பெஷல் அப்டேட்!

அக்சய்குமாருக்கு எதிராக வழக்கு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share