VIDEO: ”சட்டசபையில்” அமைச்சர் சரத்குமாரின் ‘அடேங்கப்பா’ பேச்சு! இந்தியாவின் கடனை அடைக்க ‘மெர்சல்’ யோசனை!

Published On:

| By Mathi

Speech by Minister Sarathkumar in the Assembly

தமிழக சட்டசபையில் இன்று ஆகஸ்ட் 18-ந் தேதி தமிழக மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் த. சரத்குமார் பேசியதாவது:

பிறந்து சிறந்த தலைவர்கள் மத்தியில்
சிறந்தே பிறந்த எங்கள் தலைவா!
நான் மீண்டும்
இறந்து பிறந்தால்
உங்களை மட்டும் மறவாமல் இருக்க அருள்வாய்!

ADVERTISEMENT

கிருஷ்ணன் பிறந்ததை Hindus கொண்டாடுகிறார்கள்.
இயேசு பிறந்ததை Christians கொண்டாடுகிறார்கள்.
நபிகள் பிறந்ததை இஸ்லாமியர்கள் கொண்டாடுகிறார்கள்.
நாடே கொண்டாடும் பிறந்த தினம் எதுவென்று தெரியுமா?
தமிழகம் எழுச்சி பெறும் நாள் ஜூன் 22.

நிறைய சிந்தித்து கொஞ்சமாய் பேசும் முதல்வர்
மக்கள் நலனுக்காக தன் நலம் துறப்பவர்
உண்மையாய் ஊருக்கு உழைப்பவர்
வேர்வையை சிந்தி வெற்றி பெறுபவர்
பிறரை மகிழ வைத்து மகிழ்பவர்
அடுத்தவர் பேருக்கும் புகழுக்கும் பணத்திற்கும் ஆசைப்படாத
மொத்தத்தில் மக்களாட்சி தரும் மாண்பாளர்- அப்படின்றது யார் யார் சொல்கிறார் என்று தெரியுமா?

ADVERTISEMENT

80-ஐ கடந்தவர்கள் பேரன் ஆட்சி என்கிறார்கள்
70-ல் உள்ளவர்கள் மகன் ஆட்சி என்கிறார்கள்
50-ல் உள்ளவர்கள் சகோதரர் ஆட்சி என்கிறார்கள்
40-ல் உள்ளவர்கள் நண்பன் ஆட்சி என்கிறார்கள்
20-ல் உள்ளவர்கள் எங்கள் ப்ரோ ஆட்சி என்கிறார்கள்
10-ல் உள்ளவர்கள் விஜய் மாமா ஆட்சி என்கிறார்கள்
தாய் வயிற்றில் உள்ளவர்கள் நாளைய ஆட்சியும் கில்லிதான் என சொல்கின்றனர்.

ஆக மொத்தம் அடுத்த 50 ஆண்டுகளுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சிதான்!

ADVERTISEMENT

தமிழக மக்கள் 2026 மே நாளில்

“நாளைய தீர்ப்பை” நலமுடன் எழுதினார்கள்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ”குஷி”யோ ”குஷி”
”காலமெல்லாம் காத்திருந்த” மக்களுக்கு
“காவலனாய்:
”கண்ணுக்குள் நிலவாய்”
”பகவதி”யாய்,
”திருமலை”யாய்
“பிரியமு”டன்
தமிழகத்தின் ”புதிய கீதையை” படைப்பதற்கு
”சர்க்காரில்”
நம் ”சர்க்காரில்” சரித்திரம் படைப்பாய்
“துள்ளாத மனமும் துள்ள” வைத்து,
நீங்கள் சொல்லி அடிப்பதிலும்
சொல்லாமல் அடிப்பதிலும் ”கில்லி” தலைவா
நீங்கள் பேசினால்
நீங்கள் பேசினால் எதிரிகள் ”மெர்சல்” தான்
பணநாயகத்தை ஒழித்து ”ஜனநாயக”த்தை காத்த தலைவா!
தமிழக மக்கள் ”ஒன்ஸ் மோர்” ”ஒன்ஸ் மோர்” என்று
100 வருடம் கேட்பார்கள், இது உண்மை, சத்தியம்!

பொதுவாக இந்த சபையில் தங்கள் கருத்துக்களைத் தொடங்கும் போது சாதாரணமாக இருந்த என்னை என்றுதான் தொடங்குவார்கள்.

ஆனால் நான் அப்படித் தொடங்க போவதில்லை.

ஏனென்றால் மிகச் சாதாரணமான இருந்தவன் நான்,
மிகச் சாதாரணமான எனக்கு அங்கீகாரம் கொடுத்து
மக்கள் பணியே மகேசன் பணி என்று சொல்லி தந்து
இயக்கத்தில் உறுப்பினராக்கி
தாம்பரம் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தந்து
சட்டப்பேரவை உறுப்பினராக்கி
அதன் தொடர்ச்சியாக உங்கள் அரியாசனத்திற்கு பின்பு எனக்கும் என்னை போன்றவர்களுக்கும் சரியாசனம் தந்து, அமைச்சராக்கி அழகு பார்த்த எங்கள் தலைவா!

தங்களுக்கும் என் ஆயுளையும் என்னுடைய குடும்பத்தின் ஆயுளையும் சேர்த்து பணிந்து தருகிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, எங்கள் இதயத்திலும், இல்லத்திலும், கோட்டையிலும் CM-ஆகவும் இருக்கும் எங்கள் தலைவா, நாளைய பாரதத்தின் PM நீங்கள்தான்!

AM PM பார்க்காமல் உழைக்கும் எங்கள் CM-ஏ!
நாளைய PM நீங்கள்தான், நாளைய PM நீங்களேதான்!

மாண்புமிகு முதல்வர் அவர்களின் ஒற்றைச் சொல்லை மந்திர சொல்லாக மதித்து
தேர்தல் களம் காட்டி
கை மையால் வெற்றி மையைத் தந்து
வாய்மை, தூய்மை, விசுவாசம் மிக்கவர்கள் தமிழர்கள் என்பதை நிரூபித்தார்கள்.

அச்சத்தை அச்சப்பட வைத்து மிச்சமில்லாமல் உச்சத்தைத் தொட்ட பேரவைத் தலைவர் அவர்களே, குற்றாலம் நாயகரா நீர்வழ்ச்சி கொட்டியதைப் பார்த்துள்ளேன். அவை பேசினால் எப்படி இருக்கும் தெரியுமா? அதுதான் பேரவைத் தலைவர் அவர்களின் செயல்பாடு. இதை நான் சொல்லவில்லை நாடே லைவில் சொல்கிறது, அதையும் லவ்லியாகச் சொல்கிறது. பேரவைத் தலைவர்களுக்கு என் அன்பு வணக்கம்! இவ்வாறு மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் சரத்குமார் பேசினார்.

இந்தியாவின் கடனை அடைக்க…

மேலும் முதல்வர் விஜய்யின் சேவையை பாராட்டுபவர்களுக்கு சேவை வரி விதிப்பதாக இருந்தால் இந்தியாவின் ஒட்டுமொத்த கடனையும் ஒரே நாளில் தீர்த்து விடலாம் என்றும் அமைச்சர் சரத்குமார் கூறினார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share