ஐபிஎல் போட்டிகளின் போது ஸ்டேடியத்தில் அமர்ந்து, “நீங்க கார்டுல தள்ளுனீங்களே’ அது என்ன என அமைச்சர் சரத்திடம் திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு கேள்வி எழுப்பினார்.
சட்டசபையில் கோவை, திருவொற்றியூர் மாணவர் படுகொலைகள் தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்ற போது. இந்த விவாத்தின் போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “அமைச்சர் சரத், ஸ்டேடியத்தில் அமர்ந்து கிரெடிட் கார்டு மூலம் பவுடரை நுணுக்கிய” சம்பவத்தை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி சுட்டிக் காட்டி, “அவரிடம் இதுவரை விசாரணை நடத்தப்பட்டதா?” என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் சரத், “ ஸ்டேடியத்தில் நடந்ததற்கான விளக்கம் ஏற்கனவே கொடுக்கப்பட்டுவிட்டது. அதில் அவர்களுக்கு பல்வேறு முரண்பாடுகள் இருக்கலாம். அந்த சமயத்தில் திமுக ஆட்சிதான் நடந்தது. அப்ப ஸ்டேடியம் வாசலில், “போதைப் பொருட்களை” விற்பனை செய்ததாக ஒப்புக் கொள்கிறார்களா?. விளக்கம் கொடுத்த பிறகும் ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது. என் துறையில் அரசு வேலை கொடுப்பதாக சொல்லி ரூ.888 கோடி ஊழல் செய்திருக்காங்க.. அதுல எனக்கு முரண்பாடுகள் இருக்கு.. அதனால விளக்கம் அளித்த பிறகு தேவை இல்லாத விஷயங்களை பேச வேண்டாம்” என்றார்.

இதனையடுத்து பேசிய திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, “அவரைப் பற்றி குற்றச்சாட்டு சொன்னா அதற்கு அவர் பதில் சொல்லனும்.. அதைவிட்டுவிட்டு ஒரு ரெய்டில் எங்கேயோ சிக்குது.. ரூ888 கோடின்னு ஒரு கேஸ் பதிவு பண்ண சொல்லி, ஈடி சொன்னாங்கன்னு சொல்லி அது கோர்ட்டில் இருக்கிற சப்ஜெக்ட்.. அதை எப்படி பேசலாம்? அது சரியா இருக்குமா? அதுக்கு நான் விளக்கம் சொல்ல முடியுமா? எனவே அதை சபை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்.
அவரை பத்தி சொன்னதுக்கு நீங்க பதில் சொல்லுங்க.. அதைவிட்டுட்டு மத்தவங்களை பத்தி பேசிகிட்டு இருக்கீங்க..
உங்களைப் பத்தி சொன்னதுக்கு நீங்க பதில் சொல்லுங்க.. அதை விட்டுட்டு மத்தவங்களை பத்தி பேசிகிட்டு இருக்கீங்க.. நீங்க கார்டு தள்ளுனீங்களே.. அது என்னான்னு சொல்லுங்க.. கார்டுல தள்ளுனீங்களே.. அது என்னான்னு சொல்லுங்க” என கேள்வி எழுப்பினார்.
