திமுக வெளிநடப்பு செய்தது ஏன்?: உதயநிதி பேட்டி!

Published On:

| By Kavi

தமிழக சட்டப்பேரவையில் இருந்து திமுகவினர் இன்று (ஆகஸ்ட் 17) வெளிநடப்பு செய்தனர்.

தமிழக சட்டப்பேரவையில், மாணவர் அமுதன் கொலை விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார்.

ADVERTISEMENT

தொடர்ந்து போதைப்பொருள் புழக்கம், பாலியல் குற்றங்கள் தொடர்பாக ஆளும்கட்சி எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே காரசார விவாதங்கள் நடந்தன.

இறுதியாக, திமுக கொறடா எ.வ.வேலு, எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விக்கு அரசு சார்பில் உரிய பதில்கள் அளிக்காததால் நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம் என்று தெரிவித்தார். இதைத்தொடர்ந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

ADVERTISEMENT

இதன்பின் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ”இந்த அரசிடம் சரியான பதில் எதுவுமில்லை. மாறாக, எங்கள் ஆட்சியில் என்ன செய்தீர்கள்?” என மீண்டும் எங்கள் மீதே குற்றச்சாட்டையும் பழியையும் போடும் வழக்கத்தை இந்த அரசு மேற்கொண்டு வருகிறது. 

கடந்த 3 மாதங்களாக நான் கூறி வருகிறேன், எந்தத் துறைக்கு யார் அமைச்சர் என்பதே சரியாகத் தெரியவில்லை.  அரசை பற்றி ஏதேனும் விளக்கத்தை கேட்டால் எந்த அமைச்சரும் எழுந்து பதில் சொல்லலாம். அந்த அதிகாரம் அமைச்சர்களுக்கு உண்டு.

ADVERTISEMENT

ஆனால்  இந்த அரசில் அந்தந்த துறை அமைச்சர்கள் பதில் சொல்வதில்லை. 

இன்று சட்டம் ஒழுங்கு, போதைப்பொருள் பிரச்சினைகளை பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். இதற்கு முழுபொறுபேற்க வேண்டியவர் யார் என்று அனைவருக்கும் தெரியும். அவர் இன்று அவைக்கு வரவில்லை. அதற்கான பதிலும் இல்லை. 

இதையெல்லாம் கண்டித்து திமுக வெளிநடப்பு செய்தது” என்று குறிப்பிட்டார்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share