மாணவன் கொலை: சரமாரி கேள்வி கேட்ட உறவினர்கள்- ‘ஷாக்’ ஆன அமைச்சர்கள்!

Published On:

| By Mathi

TN Ministers Upset

சென்னை திருவொற்றியூரில் படுகொலை செய்யப்பட்ட மாணவன் தனுஷின் உறவினர்கள் சரமாரியாக கேள்விகள் கேட்டதால் ஆறுதல் கூற சென்ற அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, ராஜ்மோகன் அதிர்ச்சி அடைந்தனர்.

சென்னை திருவொற்றியூரில் பிளஸ் டூ படித்து வந்த மாணவன் தனுஷ், போதைப் பொருள் பயன்பாட்டை தட்டி கேட்டதால் 20 பேர் கொண்ட கும்பலால் அடித்து படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 11 பேர் சிறுவர்கள்.

ADVERTISEMENT

இந்த நிலையில் மாணவன் தனுஷின் வீட்டுக்கு சென்ற அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, ராஜ்மோகன் ஆகியோர் அரசின் சார்பில் ரூ6 லட்சம் இழப்பீட்டுத் தொகையை அவரது குடும்பத்தினரிடம் வழங்கினர்.

அப்போது, அமைச்சர்கள் இருவரையும் சூழ்ந்து கொண்ட பொதுமக்கள்,

“காரை விட்டு இறங்குங்க சார்.. வெளியே வாங்க..

ADVERTISEMENT

ஆதவ் அண்ணா.. இன்னும் எத்தனை பிள்ளைகள் எங்க பிள்ளைகள் போல சாகும்? சொல்லுங்கண்ணா..

எதுவுமே சொல்ல மாட்டீங்களா.. என்னதான் நடக்குது?

ADVERTISEMENT

சட்ட ஒழுங்கு சரியில்ல.. கவர்மெண்ட் என்ன பண்ணுது ஒண்ணுமே புரியல?

என சரமாரியாக கேள்வி கேட்டனர். இதனால் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, ராஜ்மோகன் இருவரும் அதிர்ச்சி அடைந்தபடியே அங்கிருந்து வெளியேறினர்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share