எஸ்.பி. வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோருக்கு மீண்டும் அதிமுகவில் பொறுப்பு!

Published On:

| By Kavi

எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், தங்கமணி உள்ளிட்டோருக்கு மீண்டும் கட்சிப்பொறுப்பு வழங்கியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. 

அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களான சிவி சண்முகம், எஸ்.பி வேலுமணி தலைமையில் 25 எம்.எல்.ஏக்கள் தமிழக வெற்றிக் கழக ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்தனர். 

ADVERTISEMENT

இதனால் வேலுமணி,  சிவி சண்முகம், காமராஜ், எம்.ஆர்.விஜயபாஸ்கர்,  தங்கமணி , அன்பழகன், உடுமலை ராதாகிருஷ்ணன், கே.சி வீரமணி உள்ளிட்டோரது கட்சி பொறுப்புகளை பறித்தார் எடப்பாடி பழனிசாமி. 

இதைத்தொடர்ந்து வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினர். 

ADVERTISEMENT

இந்தசூழலில் எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், தங்கமணி உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்களுக்கு மீண்டும் கட்சி பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஜூன் 25) வெளியிட்ட அறிவிப்பில்,  

ADVERTISEMENT

துணைப் பொதுச் செயலாளர்கள்

நத்தம் இரா. விசுவநாதன் – முன்னாள் அமைச்சர், திண்டுக்கல் கிழக்கு மாவட்டம்)
எஸ்.பி.வேலுமணி,  அவர்கள் – முன்னாள் அமைச்சர், கோவை புறநகர் மத்திய மாவட்டம்)

தலைமை நிலையச் செயலாளர்
:
வரகூர் அ. அருணாசலம் – முன்னாள் அமைச்சர், பெரம்பலூர் மாவட்டம்

அமைப்புச் செயலாளர்கள்

தங்கமணி- முன்னாள் அமைச்சர், நாமக்கல் மாவட்டம்
கே.சி கருப்பணன் – ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்
எஸ்,பி.சண்முகநாதன்- தூத்துக்குடி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்
கே.பி.அன்பழகன் – முன்னாள் அமைச்சர், தருமபுரி மேற்கு மாவட்டம்
ஆர். காமராஜ், – முன்னாள் அமைச்சர், திருவாரூர் மாவட்டம்
கே.சி.வீரமணி, – முன்னாள் அமைச்சர், திருப்பத்தூர் மாவட்டம்
பி.பாலகிருஷ்ண ரெட்டி, – முன்னாள் அமைச்சர், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம்
திருத்தணி கோ. அரி, – திருவள்ளூர் மேற்கு மாவட்டம்
சி. கிருஷ்ணமுரளி,- கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி, தென்காசி வடக்கு மாவட்டம்
ஆர்.பி. மருதராஜா, – அம்மா நகர், துறையூர் சாலை, செஞ்சேரி அஞ்சல், பெரம்பலூர் மாவட்டம்

கொள்கை பரப்பு இணைச் செயலாளர்கள்

எம்.ஆர். விஜயபாஸ்கர் முன்னாள் அமைச்சர், கரூர் மாவட்டம்
மணிகண்டன் முன்னாள் அமைச்சர், இராமநாதபுரம் மாவட்டம் 
அருண்மொழிதேவன்,புவனகிரி தொகுதி, கடலூர் தெற்கு மாவட்டம்
மகேந்திரன்,மடத்துக்குளம் தொகுதி, திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்டம்
நடராஜ் காங்கேயம் ஒன்றியக் கழகச் செயலாளர், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்டம்
ரெத்தினசாமி திருவையாறு தொகுதி, தஞ்சாவூர் மாநகர் மாவட்டம்

கொள்கை பரப்பு துணைச் செயலாளர்கள்

சந்திரகாசி,- பெருமத்தூர் அஞ்சல், குன்னம் தாலுகா, பெரம்பலூர் மாவட்டம் 
சுப்பையா பாண்டியன் ஆராய்ச்சிப்பட்டி, பணவடலிசத்திரம் அஞ்சல், சங்கரன்கோவில் தாலுகா, தென்காசி வடக்கு மாவட்டம்,

ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share