ரூ.2.47 லட்சம் கோடி கடன் முதல் டிரான்ஸ்ஃபார்மர் ஊழல் வரை : மின்சாரத் துறை வெள்ளை அறிக்கை – முழுவிவரம்!

Published On:

| By Kavi

தமிழக மின்சாரத் துறை ரூ.2,47,130 கோடி கடனில் உள்ளது என்று மின்சாரத் துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் கூறினார். 

தவெக ஆட்சி அமைந்தது முதல் தமிழக மக்கள் மின்வெட்டு பிரச்சினையை சந்தித்து வருகின்றனர். இதுதொடர்பாக மின்சாரத் துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமாரிடம் கேட்டதற்கு விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிடுவோம் என்று கூறியிருந்தார்.

ADVERTISEMENT

இந்தசூழலில்  இன்று (ஜூன் 25) மின் வாரிய தலைமை அலுவலகத்தில் துறை அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார் வெள்ளை அறிக்கை வெளியிட்டார். 

கடந்த 25 ஆண்டுகளாக மின் துறை கடந்து வந்த பாதை குறித்து விளக்கம் அளித்தார். 

ADVERTISEMENT

* 31.03.2026 நிலவரப்படி, தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அனைத்து நிறுவனங்களின் மொத்த நிலுவைக் கடன் ரூ.2,47,130 கோடியாக உள்ளது.

*வரவிருக்கும் ஆண்டிற்கான திட்டமிடப்பட்ட வருவாய் ரூ.1,43,413 கோடி மற்றும் திட்டமிடப்பட்ட செலவினம் ரூ.1,41,740 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது

ADVERTISEMENT

*தமிழ்நாட்டின் மொத்த மின் நுகர்வோர் எண்ணிக்கை 351.73 லட்சமாக உயர்ந்துள்ளது. இதில் வீட்டு உபயோக நுகர்வோர் மட்டும் 250.07 லட்சம் ஆகும். 

*இதுவரை மின்சார வாரியத்தால் அதிகபட்சமாக ஒரு நாளில் பூர்த்தி செய்யப்பட்ட 15 நிமிட நேர அளவிலான உச்சக்கட்ட மின் தேவை (Peak Demand) 21,307 MW ஆகும். இது தடையின்றி வழங்கப்பட்டுள்ளது.

*மின்சார வாரியத்தில் மொத்த அங்கீகரிக்கப்பட்ட பணியிடங்கள் 1,40,635 ஆகும். இதில் தற்போது 74,714 பேர் பணியில் உள்ளனர்; 65,921 பணியிடங்கள் காலியாக உள்ளன.

*மொத்தம் 20,449 பணியிடங்களை நிரப்ப முன்மொழிவு செய்யப்பட்டுள்ளது.

*25 ஆண்டுகளுக்கும் மேலாகச் சேவையில் உள்ள பழைய துணை மின் நிலையங்கள் மற்றும் உபகரணங்களை ரூ.8,318 கோடி செலவில் புதுப்பிக்க/சீரமைக்க மண்டல வாரியாகத் திட்டமிடப்பட்டுள்ளது.

*2026-27 நிதியாண்டில்  ரூ.15,032 கோடி செலவில் 231 புதிய துணை மின் நிலையங்களும், அடுத்த 4 ஆண்டுகளில் (2027-2031) ரூ.9,023 கோடி செலவில் 238 புதிய துணை மின் நிலையங்களும் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

வருவாய் செலவு

* 2001-2006: வருவாய் ரூ.59,084 கோடி, செலவு ரூ.67,439 கோடி, பற்றாக்குறை ரூ.8,355 கோடி.

* 2006-2011: வருவாய் ரூ.92,737 கோடி, செலவு ரூ.1,28,200 கோடி, பற்றாக்குறை ரூ.35,463 கோடி

* 2011-2016: வருவாய் ரூ.1,92,971 கோடி, செலவு ரூ.2,49,332 கோடி, பற்றாக்குறை ரூ.56,361 கோடி

* 2016-2021: வருவாய் ரூ.3,20,140 கோடி, செலவு ரூ.3,78,674 கோடி, பற்றாக்குறை ரூ.58,534 கோடி

* 2021-2026: வருவாய் ரூ.4,97,996 கோடி, செலவு ரூ.5,32,443 கோடி, பற்றாக்குறை ரூ.34,447 கோடி

மின்சாரத் துறை அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார் பேசுகையில்,  ”ஒட்டுமொத்த தமிழக மக்களும் பாதிக்கப்படும் வகையில் மின்சாரத் துறையை கொண்டு வந்து விட்டுள்ளனர். டிரான்ஸ்ஃபார்மர் மட்டுமல்லாமல் மின் கண்டெக்டர் கொள்முதலிலும் முறைகேடு நடந்துள்ளது. 9 இடங்களில் மின் கண்டெக்டர் கொள்முதல் செய்ததில்  1028  கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. விரைவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறும்.

4000 மெகாவாட், 5000 மெகாவாட் கூட சொந்தமாக நாம் உற்பத்தி செய்யாவிட்டால், எதற்காக இவ்வளவு வேலை பார்த்திருக்கிறோம்.

முதல்வர் விஜய் தலைமையில் ஆட்சியமையவில்லை என்றால் மின்வாரியம், தனியார்மயமாகியிருக்கும். மின் வாரியத்தை மேம்படுத்த வேண்டிய பணிகளில் ஈடுபடுவோம்” என்றார். 

வெள்ளை அறிக்கை முழுமையாக

Nirmal Kumar Speech | இளைஞர்களுக்கு 'ஜாக்பாட்' - அடுத்து என்ன..? | TVK | CM Vijay | Minnambalam
Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share