ஏழு தென்னக ரயில்களின் வேகம் அதிகரிப்பு: பயண நேரம் குறையும்!

Published On:

| By Minnambalam

தெற்கு ரயில்வேயில் பல்வேறு வழித்தடங்களில் ஏழு ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படுவதால் இனி பயண நேரம் குறைய வாய்ப்புள்ளது.

130 கிலோமீட்டர் வரையிலான ரயில்களின் வேகம் அதிகரிப்பு மற்றும் ரயில் தண்டவாளங்களின் உறுதித்தன்மை அதிகரிப்பு ஆகியவை காரணமாக ஏழு ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனால் பயண நேரமும் குறைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி சென்னை சென்ட்ரலில் இருந்து புதுடெல்லி செல்லும் ஜிடி எக்ஸ்பிரஸ் 6.30 மணியளவில் புதுடெல்லியை சென்றடைந்த நிலையில் தற்போது இதன் வேகம் நீட்டிக்கப்பட்டு 90 நிமிடங்கள் முன்னதாக காலை 5.05 மணியளவில் டெல்லி சென்றடைய உள்ளது.

இதேபோல் சென்னையில் இருந்து டெல்லி செல்லும் மற்றொரு ரயிலான தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் வழக்கத்தைக் காட்டிலும் 70 நிமிடங்கள் முன்னதாக டெல்லி சென்றடைய உள்ளது.

மேலும் குருவாயூர்-புனலூர் எக்ஸ்பிரஸ் 50 நிமிடங்களும், மும்பை-திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் 60 நிமிடங்களும், ராஜ்கோட்-கோவை எக்ஸ்பிரஸ் 70 நிமிடங்களும், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் 40 நிமிடங்களும் பயணநேரம் குறைக்கப்பட்டு வழக்கத்தை விட முன்னதாக ரயில்கள் சம்பந்தப்பட்ட இடங்களுக்குச் செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

-ராஜ்

நீங்கள் பூஜை போட வேண்டிய ஆயுதம் எது?

டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க..!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share