டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க..!

அரசியல்

வண்டலூர் உயிரியல் பூங்கா திறப்பு!

இன்று (அக்டோபர் 4) ஆயுத பூஜையை முன்னிட்டு, வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும் என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆயுத பூஜை கொண்டாட்டம்!

இந்தியா முழுவதும் இன்று ஆயுத பூஜை வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட உள்ளது.

நடைமேடை கட்டணம் உயர்வு!

விழாக்காலங்களை முன்னிட்டு இன்று முதல் திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, விழுப்புரம் ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் ரூ.10-லிருந்து ரூ.20-ஆக உயர்த்தப்பட உள்ளது‌.

விடுதலை நவம்பர் ரிலீஸ்!

வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிக்கும் விடுதலை திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது. முதல் பாகம் நவம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருப்பதி தேரோட்டம்!

திருப்பதி பிரம்மோற்சவம் 8-ஆம் நாள் திருவிழாவான இன்று மகா தேரோட்டம் நடைபெற உள்ளது.

வானிலை நிலவரம்!

மத்திய மேற்கு வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இந்தியா – தென் ஆப்ரிக்கா மோதல்!

இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதும் 3-வது டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.

ஒற்றுமை நடைபயணம்!

சரஸ்வதி பூஜை, விஜயதசமியை முன்னிட்டு ராகுல் காந்தி ஒற்றுமை நடைபயணம் இரண்டு நாட்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் டீசல் விலை!

சென்னையில் இன்று 136-வது பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வீரன் படப்பிடிப்பு நிறைவடைந்தது!

சரவணன் இயக்கத்தில் ஹிப் ஹாப் ஆதி நடிக்கும் வீரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

முத்துராமலிங்கர் தங்கக்கவசம் யாருக்கு?: எடப்பாடி -பன்னீர் மோதல்!

உளவுத் துறை எச்சரிக்கை : பாதுகாப்பு வளையத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர்!

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published.