இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ கூலி ‘ திரைப்படத்தில் மலையாள நடிகர் சௌபின் சாஹிர் நடிக்கிறார் என அப்படக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் பரபரப்பான இயக்குநர்களில் ஒருவரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘ கூலி ‘ திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு படத்தின் அறிவிப்பு முதலே அதிகரித்து வந்தது. சில நாட்களுக்கு முன்பு இந்தப் படத்தின் அறிவிப்பு டீஸர் அப்படக்குழுவால் வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில், இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் குறித்த அறிவிப்பு இன்று மாலை 6:30 முதல் அறிவிக்கப்படும் என அப்படக்குழுவால் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, தற்போது இந்தப் படத்தில் மலையாள நடிகர் சௌபின் சாஹிர் நடிக்கிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் ‘ தயால் ‘ என்கிற கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார்.
பான் இந்திய திரைப்படமாக உருவாகும். இந்தப் படத்தில் கன்னட நடிகர் உபேந்திரா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது. மேலும், பாலிவுட் நடிகர் அமீர் கான் ஒரு கேமியோ தரவுள்ளார் எனவும் தகவல் வெளியானது. இவைகள் குறித்த அறிவிப்பு இனி வரும் காலங்களில் வரும் என எதிர்பார்க்கலாம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– ஷா
டிஸ்னி ஹாட்ஸ்டாருடன் கைகோர்த்த ரிலையன்ஸ் : சிசிஐ ஒப்புதல்!